கருத்துமுரண்பாடுகள்
maandag 9 mei 2011
ஒசாமா பில்லேடனின் 5 புதிய வீடியோ பதிவுகளை அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்ரகன் வெளியிட்டுள்ளது..
(வீடியோ இணைப்பு)
அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப்படையினரால் பாகிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்ட ஒசாமா பில்லேடனின் 5 புதிய வீடியோ பதிவுகளை அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்ரகன் வெளியிட்டுள்ளது..
அமெரிக்காவால் வெளியிடப்பட்டுள்ள 5 வீடியோவும் ஒசாமா இருந்த வீட்டில் பதிவானவை.
வீடியோ பதிவு மூலம் ஒசாமா அபோதாபாத்தில் இருந்தது உறுதியாகி உள்ளது.
தொலைக்காட்சியில் ஒசாமா செய்தி பார்ப்பது போல் வீடியோவில் பதிவாகி உள்ளது.
ஒரு வீடியோவில் ஒசாமா பின்லேடன், தன்னைப் பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்ப்பது போல் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோக்கள் அனைத்தும் ஒசாமா சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் வீட்டில் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது
ஓசாமா பின்லேடன் பண்ணை வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. பின்லேடன் தன்னைப் பற்றிய செய்தியை தானே பார்ப்பது போல இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளது. அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் இப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக அமரிக்க பென்டகன் தெரிவித்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்படியாயின் அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும், பண்ணை வீட்டிற்குள் ஏற்கனவே அமெரிக்காவால் கமரா பொருத்தப்பட்டு இருந்ததா இல்லை பின்லேடனின் ஆட்கள் பொருத்தியிருந்த கமராவால் இந்த வீடியோ எடுக்கப்பட்டதா என்று அவர்கள் தெளிவாகக் கூறவில்லை.
பாதுகாப்புக்காக வீட்டைச் சுற்றி பல வீடியோக் கமராக்கள் போடப்பட்டு இருந்திருக்கிறது. அவை வயர் மூலம் தொடர்புடையதாயின், அக் கமராவில் பெறப்படும் காட்சிகள் குறித்த திரையில் பார்க்க முடியும். ஆனால் வயர்லஸ் என்று அழைக்கப்படும் கமராக்களாயின் குறித்த திரைக்கு அது தனது பதிவுகளை ரிரான்ஸ் மிட் பண்ணும்.
அப்படி அது ரிரான்ஸ் மிட்(ஒளிபரப்பும்) போது அதனை ஒத்த சனல்( அலைவரிசை) கொண்ட உள்வாங்கிகளை எவர் வைத்திருந்தாலும் அந்தக் கமரா ஒளிபரப்புவதை பார்க்க முடியும். அப்படி அமெரிக்கா எதிரி பொருத்திவைத்திருந்த கமரா ஊடாக வேவுபார்த்துள்ளதா என்ற சந்தேகமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எது எவ்வாறு இருப்பினும், பல மாதங்களாக பின்லேடனின் வீட்டை வேவுபார்த்து சரியான நேரத்தில் தாக்குதலை துல்லியமாக நடத்தியுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் அனைத்துத் தீவிரவாதத் தலைவர்களும் தற்போது உஷாராகியுள்ளனர். எந்த நாட்டில் இருந்தாலும் அமெரிக்கா ஊடுருவி தாக்குதலை நடத்தலாம் என பலர் அஞ்சுவதாக சில ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
07 May 2011
Geen opmerkingen:
Een reactie posten
‹
›
Homepage
Internetversie tonen
Geen opmerkingen:
Een reactie posten