
இன்று ஆனையிறவுப் படைத்தளம் மீதான நினைவுநாள். ஆனையிறவைக் கைப்பற்றிய நினைவுநாளன்று. மாறாக 1997 ஆம் ஆண்டு இன்றைய தினம் இப்படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகளாற் பாரியதொரு தாக்குதலை நிகழ்த்தப்பட்டது. அதன் நினைவுநாள்தான் இன்று.
1996 இன் இறுதிப்பகுதியில் கிளிநொச்சி நகரம் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்டது. முல்லைத்தீவு இழப்பை இதன்மூலம் ஈடுசெய்ததாக அரசு நினைத்துக்கொண்டிருந்தது. (ஆனால் தமிழர்தரப்புக்கு முல்லைத்தீவு வெற்றிக்கு ஒப்பான வெற்றி இன்றுவரை வேறெதுவுமில்லை. அவ்வெற்றியின் வேரிலிருந்துதான் இன்றுவரையான எல்லாமே. முல்லைத்தீவு புலிகளிடம் இருக்கும்வரை அவர்களை எதுவும் செய்யமுடியாதென்பதும் எல்லோரும் அறிந்ததே) கிளிநொச்சியை இழந்து ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே பாரியதொரு தாக்குதலைப் புலிகள் நடத்தத் திட்டமிட்டனர்.
1997 இன் ஜனவரி ஒன்பதாம் நாள் ஆனையிறவுப் படைத்தளம் மீது பலமுனைகளால் நகர்ந்த புலிகளின் படையணிகள் தாக்குதல் நடத்தின. இதில் ஆனையிறவின் பிரதான ஆட்லிறி எறிகணைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அதில் பதினொரு ஆட்லறிகள் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. அவற்றைவைத்து எதிரிமீதே தாக்குதல் நடத்தினார்கள்.
அவ்வேளை கிளிநொச்சி மீது எத்தாக்குதலும் நடத்தப்படவில்லை. ஆனையிறவிலிருந்து நேரடியான தரைவழிப்பாதை இருக்கவில்லை. பரந்தன் படைத்தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்படைத்தளம் கைப்பற்றப்பட்டால் ஆனையிறவிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குத்
இந்நிலையில் கைப்பற்றிய ஆட்லறிகள் பதினொன்றையும் தகர்த்துவிட்டு கைப்பற்றிய இடங்களிலிருந்து பின்வாங்கினர் புலிகள். பாரியதொரு திருப்புமுனையாக நிகழ்ந்திருக்கவேண்டிய அச்சமர் பரந்தன் படைத்தளமொன்று கைப்பற்றப்படாமையால் எதிர்பார்த்த விளைவைத்தரவில்லை.
பின் ஜெயசிக்குறுசமர் தொடக்கம் பலகளங்களைக் கண்டபின்னர் 2001 இல் ஏப்ரல்
Geen opmerkingen:
Een reactie posten