ஜெனீவா - மனித உரிமைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பிலான சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம் இன்று திரையிடப்படுகின்றது.
இலங்கையின் போர் குற்றங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தி சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஏற்கனவே இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்த நிலையில் புதிய ஆவணப்படம் திரையிடப்படுகின்றது.
பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத் திரையிடலின் போது மனித உரிமைகள் தொடர்பிலான பல்வேறு சர்வதேச பிரதிநிதிகள் பங்கெடுத்துக் கொள்வதோடு ஐ.நா மனித உரிமைச் சபையினைச் சேர்ந்த பல நாடுகளில் இராஜதந்திரிகளும் பங்கெடுத்துக் கொள்கின்றனர் என அறியமுடிகின்றது.
எதிர்வரும் புதன்கிழமை சனல்-4 தொலைக்காட்சியில் இந்த புதிய ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் ஜெனீவாத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றது.
போர் தவிர்ப்பு வலயத்தில் பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதற்கு சட்டபூர்வமான, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட- ஐ.நா அதிகாரிகளால் ஒளிப்படங்களுடன் பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்றும் குறித்த இந்த புதிய ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
Should England's cricket team tour Sri Lanka?
As England's cricket team sets off for Sri Lanka, Channel 4 News Foreign Editor Ben De Pear asks whether the tour should be going ahead given the country's human rights record?
http://www.tamilwin.com/show-RUmqyDSVPdmv3.html
இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டி பிளேவர் இலங்கையின் கிறிக்கெட் மைதானங்கள் தொடர்பாக ஆராய இன்று இலங்கைக்கு பயணமாகவுள்ளார்.
“இலங்கையின் கொலைக்களங்கள்” பார்வையிட்ட இங்கிலாந்து கிறிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012, 03:01.13 PM GMT ]
இந்த நிலையில், சனல்4 தொலைக்காட்சியின் நிருபர் பென் டி பியர், இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முன், அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கையின் இறுவெட்டு ஒன்றினைக் கையளிக்குமாறு அவரிடம் கேட்டுள்ளார்.
ஏனெனில், இலங்கை கிறிக்கெட் சபை ஊழல் மோசடிகள் நிறைந்ததாகவும், கிறிக்கெட் மைதானங்களை இலங்கை இராணுவத்தினரே பராமரித்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற நாடாக கருதப்படும் இலங்கையில், விசாரணை நடத்த வேண்டுமென சர்வதேச பொதுமன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா என்பன கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் இலங்கைகான சுற்றுப் பயணமானது, இங்கிலாந்து மக்களிடம் பல கேள்விகளைத் எழுப்பியுள்ளது.
இதேவெளை, சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் வெளிநாட்டுச் செய்தியாளர் ஜொனாத்தன் மில்லர், இலங்கையின் கொலைக்களங்கள் உள்ளடங்கிய இறுவெட்டினை ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டி பிளேவரிடம் கையளித்தார்.
ஏனெனில், அன்டி பிளேவர் 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலகக்கிண்ண கிறிக்கெட் போட்டியின் போது, சிம்பாவேயில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கெதிராக கறுப்புப் பட்டியணிந்து, அனைத்துப் போட்டிகளிலும் விளையாடியவர். இவர் மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரல்கொடுத்து வரும் நபரென்பதால் இலங்கையில் இடம்பறெ்ற மனித உரிமை மீறல்கள் அடங்கிய இறுவெட்டினை கையளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற நாட்டுடன் இங்கிலாந்து அணி எவ்வாறு போட்டியிடும் என்ற கேள்விக்கு, சனல் 4 தொலைக்காட்சியின் வெளிநாட்டு செய்தியாளர் ஜொனாத்தன் மில்லர் பதிலளிக்கையில்,
ஐ.நா சபை இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நான் ஒரு அரசியல் நடுநிலையாளனாகவே செயற்படுகின்றேன். இலங்கை தொடர்ச்சியாக கிறிக்கெட் விளையாடும் ஒரு நாடாகும்.
நாங்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது விளையாடுவதற்காகவே. அங்கு இடம்பெறும் அரசியல் மனித உரிமைகள் பற்றி ஆராய அல்ல என அன்டி பிளேவர் கூறிய கருத்துக்கு நானும் உடன்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten