இரு தேசியங்கள்: இடையில் நசிபடும் மனித (பெண்) உடல்கள்.
இரண்டு வருடங்களுக்க முன்பு இலங்கையில் நடைபெற்று முடிந்ததாக கூறப்படும் போரின் பின் அதன் விளைவுகளை அந்த மனிதர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற காலமிது. போர் ஒன்று நடைபெற்றதற்கும் அப் போரில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் உருவாகியமைக்குமான காரணங்கள் இப்பபொழுதும் அப்படியே கவனிப்பாரற்று இருக்கின்றுது. ஆனால் போரின் இறுதிக் கணங்களில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்களும் மற்றும் மனித உடல்களை குறிப்பாக பெண்களின் உடல்களை சித்திரவதையும் வன்புணர்ச்சியும் செய்தற்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆகவே இந்தப் போரின் இறுதியில் எவ்வாறு இலங்கை இராணுவம்> அதாவது சிங்கள தேசியவாதிகள்> மனித உடல்களை குறிப்பாக தமிழ் பெண்களின் உடல்களை நோக்கினர்> பார்த்தனர்> பயன்படுத்தினர் என்பது தொடர்பாக இக் கட்டுரையானது ஆராய்கின்றது. மறுபுறம் இவ்வாறான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தின் மீது; சர்வதே சட்டங்களை போர்க் காலத்தில் மீறியமைக்கான குற்றச் சாட்டுக்களை நிறுபிப்பதற்காக தமிழ் தேசியவாதிகள் குறிப்பாக புலம் பெயர்ந்த அல்லது பெயர்க்கப்பட்ட தமிழர்களும் அவர்களது ஊடகங்களும் முனைப்பாக செயற்படுகினற்ன.
இந்த நோக்கத்திற்காக இறந்த மனித உடல்களை குறிப்பாக தமிழ் பெண்களின் உடல்களை தமிழ் தேசியவாதிகள் எவ்வாறு பயன்டுத்துகின்றன என்பது தொடர்பாகவும் இங்கு ஆராயப்படுகின்றது. இரு தேசியவாதிகளினதும் தேசிய கருத்தாக்கமானது வேறு வேரானதாக இருந்தபோதும்> பெண் உடல்களைப் பொருத்தவரை இரு பகுதியினரும் தந்தைவழியாதிக்க (ஆணாதிக்க) இனவாத கருத்து நிலையில் இருந்தே பார்த்து தமது செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளனர். ஆகவேதான்> சிங்கள மற்றும் தமிழ் தேசியவாதிகள் இருவரும் பெண்களின் உடல்களை பொருளாகவும்> பாலியல் பண்டங்களாகவும் மற்றும் தேசம் ஒன்றின் குறியீடாகவுN;ம பார்த்ததிலும் பயன்படுத்துவதிலும் ஒன்றுபட்டு காணப்படுகின்றனர். இதற்கு காரணம் இவர்களின் தேசியவாதக் கருத்துக்களை ஆதிக்கம் செய்கின்ற தந்தைவழியாதிக்க அடிப்படையிலான இருபாலுறுவு மற்றும் இனவாதக் கருத்தியல்களின் பெண்கள் தொடர்பான கட்டுமானங்களே என்பதை இக் கட்டுரை சுட்டிக் காட்ட முனiகின்றது.
மனித அடையாளம்: பன்முக அடையாங்களின் சேர்க்கை
இக் கட்டுரையை எழுதுவதற்கு காணமாக இருந்ததே இவ்வாறு போர்க்குற்றங்களை நிறுபிப்பதற்காக வெளியிடப்பட்ட நிழற் படங்களும் மற்றும் கைத் தொலைபேசியலால் எடுக்கப்பட்ட தொலைக்காட்சிப் படங்களுமாகும் (http://youtu.be/DMKJaJH9BR8). இந்தப் படங்களைப் பார்த்தபோது எனது மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களும் கேள்விகளுமே; இங்கு கட்டுரையாக வடிவம் பெறுகின்றது. நம் ஒவ்வொருவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் அதாவது பன்முக அடையாளங்கள் உள்ளன என வாதிடப்படுகின்றது (Kimberle Crenshaw). ஊதாரணமாக> நான் ஒரு புறம் ஆணாக இருப்பதால் தந்தைவழியாதிக்க சமூகத்தில் அதற்குரிய சலுகைகளை அனுபவிப்பதுடன் பெண்களை அடக்குவதற்கும் சுரண்டுவதற்குமான அதிகாரத்தை பெற்றவனாக இருக்கின்றேன். மறுபுறம் இலங்கையில் ஒரு தமிழராகவும் புலம் பெயர்க்கப்பட்டு வாழுகின்ற தேசத்தில் வேறுநிற மனிதராகவும் அடையாளப்படுத்தப்பட்டு உரிமைகளும்; சலுகைகளும் மறுக்கப்பட்டு அல்லது குறைந்தளவில் அனுபவித்துக்கொண்டு வாழ்கின்றேன். இது வெள்ளையினப் பெண்கள் அவர்களது சமூகத்தில்; தந்தைவழியாதிக்கத்;தால் அடக்கப்பட்டும் சுரண்டப்படும் அதேநேரம்; இதே பெண்கள் பிற நிறத்தவர்களை அடக்குகின்றவர்களாகவும் இருக்கின்ற இவர்களது இரட்டைதன்மை கொண்ட வாழ்வை வாழ்;வதற்கு ஒப்பானதாகும் (Ann Mclintock). ஆகவே> ஒரு ஆணாக> ஆண்தன்மையுள்ளவராக> ஆணாதிக்கவாதிகயாக> இருபாலுறவு கொண்டவராக> தமிழராக> புலம் பெயர்க்கப்பட்ட மனிதராக> பெண்ணிலைவாதியாக எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு மனிதராக எனப் பல அடையாளங்களினுடாக இந்தப் படங்கள் அல்லது காட்சிகள் பல்N;வறான உணர்வுகளை சிந்தனைகளை எனக்குள் உருவாக்கியது. இவற்றில் பல அடையாளங்கள் என் மீது கட்டமைக்கப்பட்டவை என்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறான ஒரு சிக்கலான அடையாளத்துடனும் பல்வேறு உணர்வுகள் மற்றும் சிந்தனகைளுடாக இந்தப் ;படங்களையும் காட்சிகளையும்; எவ்வாறு நான் பார்க்கின்றேன் என்பதன் பதிவே இக் கட்டுரை.
மேற்கூறப்பட்ட சிக்கலான அடையாளத்துடன் இதில் இணைக்கப்பட்டுள்ள படங்களையும் மற்றும் இணைப்பிலுள்ள தணிக்கை செய்யப்படாத படங்களையும் பார்த்த பொழுது எனக்குள் ஒரு கேள்வி எழுந்ததது. இந்த வீடியோவை எடுத்த நபரும் நானும் இறந்துபோன இந்தப் பெண்ணின் நிர்வாண உடலை ஒரே மாதிரியாகவா பார்க்கின்றோம்? இதைப் காட்சிப்படுத்துகின்றவர் நிச்சயமாக சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த ஆண் இராணுவத்தினர் ஒருவராகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவர் தனது தந்தைவழியாதிக்க (ஆணாதிக்க) மற்றும் சிங்கள இனவாத கருத்தாதிக்கத்தினுடாகவே இந்த உடலைப் பார்த்திருப்பார். இதேநேரம் நான் என்னைப் பார்த்தும் ஒரு கேள்வி கேட்டேன். ஒரு ஆணாக நான் எவ்வாறு இந்த உடலைப் பார்க்கின்றேன்? நம் இருவரது பார்வைக்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா என சிந்தித்தேன்? என் உள்ளுணர்வு இல்லை என்றே கூறியது. ஆம் நாம் இருவரும் (தமிழ் மற்றும் சிங்கள) ஆண்களாக ஒரே மாதிரியான கருத்து நிலையிலிருந்தே இந்தப் பெண்ணின் நிர்வாண உடலை அதுவும் இறந்துபோன உடலைப் பார்க்கின்றோம் என்பதைப் எனது பிரக்ஞையினால்; புரிந்துகொண்டேன். இவ்வாறு ஒரு ஆணாக இந்தப் படத்தைப் பார்த்து உணருகின்றபோது இன்னொரு எண்ணம் என் மனதை இடைவெட்டியது. அதாவது> நாம் (தமிழ் மற்றும் சிங்களம்) இருவரும் நமது இன்னுமொரு அடையாளமான இனத்துவ அடையாளத்தினுடாக இந்தப் பெண்ணின் உடலை வேறு வேறான பார்வையிலும் பார்கின்றறோம் என்பதே அது. ஏனனில் இந்தப் பெண் ஒரு தமிழ் பேசுகின்ற பெண். நானும் ஒரு தமிழ் பேசுகின்ற சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆகவே என்னை ஆட்கொண்ட தமிழ் இன அல்லது மொழி அடையாளத்தினுடாக இந்தப் பெண்ணை எனது தமிழ் அடையாளத்தின் ஒரு பகுதியாக இனம் கண்டேன். நான் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தபோதும் என்னை தமிழ் தேசியவாதியாக அடையளப்படுத்த விரும்பியதில்லை. இருந்தபோதும் நாம் இருவரும் (இப்பொழுது நானும் அந்தப் பெண்ணும்) இன மொழி அடிப்படையில் ஒருவர் என உணர்ந்தேன். ஆனால் சிங்கள ஆண் இராணுவத்தினர் இந்த உடலை வேற்று இன அதாவது எதிரி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடலாக இனவாதக் கண்ணோட்டத்தினுடாகவே பார்த்திருப்பர். இதைவிட இந்தப் பெண் உடல் தொடர்பாக தமிழின ஆண்களின் பொதுவான பார்வை எப்படி இருந்திருக்கும் என்பது அக்கறைக்குரியதாகும். அதாவது > சிறிலங்கா அரசாங்கம் போரின் இறுதிக் கணங்களில் மேற்கொண்ட போர்க் குற்றங்களை நிறுபிப்பதற்காக> தமிழ் தேசியவாதிகள் எவ்வாறு பிரக்ஞையற்று தமது தந்தைவழியாதிக்கப் பார்வையுடன் இறந்துபோன இந்தப் பெண்களின் உடல்களைப் எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என்ற கேள்வியை ஒரு பெண்ணிலைவாதியாக கேட்பது தவிர்க்க முடியாதது என உணர்ந்தேன். ஆகவே> ஒரு பெண்ணுடலானது ஒரு ஆணின் சிந்தனை> இனம் மற்றும் சுழல்; சார்ந்து பல்வேறுவிதமான பார்வைகளுக்கும் பயன்பாடுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றது என்பதை பெண்ணிலைவாத அடிப்படையில் இக் கட்டுரையானது ஆராய முற்படுகின்றது.
பெண்கள் மீதான அடையாள கட்டுமானங்கள்
பொதுவாக தந்தையாதிக்க> காலனித்துவ மற்றும் தேசியவாத கருத்தாதிக்கங்களின்; அடிப்படையில் ஆதிக்கத்திலுள்ளவர்கள் தம்மைச் சாராதவர்;களை “மற்றவர்கள்” என் அடையாளப்படுத்துகின்றனர். இந்த அடையாளப்படுத்தலானது “மற்றவர்”களின்; உடல்களை வெறும் பொருட்களாக> பண்டங்களாக> ஜடங்களாக குறுக்கிவிடுவதற்கு வழிசெய்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை சிங்களம் பேசுகின்ற மனிதர்களுக்கு தமிழ் பேசுகின்ற மனிதர்கள் வெறும் ஜடங்களே. இதன் மறுதலையான தமிழ் பேசுகின்ற மனிதர்களுக்கும் சிங்களம் பேசுகின்ற மனிதர்கள் வெறும் முளையில்லாத பண்டங்களே என்ற அடையாளப்படுத்தல்கள் தொடர்ச்சியாக இருந்துவந்துள்ளன. இதேபோல் இரு தேசங்களிலும் இருக்கின்ற ஆண்களுக்கு தம் தேசத்தைச் சேர்ந்த “தம் பெண்கள்” தமது தேசங்களையும் அதன் கலாசரத்தையும் அடையாளப்படுத்துகின்ற குறியீடுகளும்> அவற்றைப் பாதுகாப்பவர்களும்> அதற்கான புதிய தலைமுறையை உருவாக்கிக் கொடுக்கின்ற இயந்திரங்;கள் மட்டுமே. மேலும் “தமது பெண்கள்” தாம் பயன்படுத்துவதற்கான பாலியல் பண்டங்களே. .இதற்கும் ஒருபடி மேலாக மற்ற தேசத்தின் பெண்கள் என்பவர்கள் பாலியல் சித்திரவதைகளுக்கும் வன்புணர்வுகளுக்கும் உள்ளாக்கப்படவேண்டியவர்கள் என்றே நம்புகின்றனர் இந்த ஆண்கள். இவ்வாறன பார்வைக்கு காரணம் தந்தையாதிக்க இருபாலுறவு கருத்தியல் கட்டமைத்த பால்> பால் தன்மை> பாலுறவு தொடர்பான எதிர் எதிர் கட்டமைவுகளே என்கின்றனர் சமூக சிந்தனையாளர்களும் பெண்ணியவாதிகளும் (King,C. ; Vance, ).
பொதுவெளியில் உதாரணமாக போர் நடைபெறுகின்ற இடத்திலோ அல்லது ஒரு தொழிற்சாலையிலே ஆண்கள் பெண்கள் உட்பட அனைவரும் அதிகாரம் படைத்தவர்களால் அல்லது தமது முதலாளிகளால் (பொதுவாக ஆண்களால்) இயந்திரப் பண்டங்களாக குறுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றனர். மறுபுறம் பொது (வேலைத்தளங்கள்) மற்றும் தனிப்பட்ட (வீடு) வெளிகளில் பெரும்பாலும் பெண்கள் (பாலியல்) பண்டங்காளாக குறுக்கப்பட்டு ஆண்களால் பயன்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு அனைவராலும் குறிப்பாக ஆண்களால் பார்க்கப்படுவது; என்பது தந்தையாதிக்க உலகத்திற்கே பொதுவானதாகும் என்றால் மிகையான கூற்றல்ல. இந்த ஆண்கள் அடக்குபவர்களாக இருந்தால் என்ன அடக்கப்படுபவர்களாக இருந்தால் என்ன அனைவரும் பெண்கள் தொடர்பாக மேற்குறிப்பிட்டவாறான ஒரு பொதுவான பார்வையையே கொண்டுள்ளனர். இதன் காரணமாகத்தான் இலங்கையில் அண்மையில் முடிவுற்றதாக கூறப்படுகின்ற போரின் இறுதிக ;கணங்களில் இலங்கை இராணுவத்தால் தமிழ் பெண்கள் சித்திரவதை; செய்யப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். மறுபுறம் இவ்வாறு இறந்த தமிழ் பெண்களின் உடல்களை தமிழ் தேசியவாதிகளும் அவர்களது ஊடகங்களும் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை நிறுபிப்பதற்காகப் பயன்படுத்துகின்றன. இவ்வாறான ஒர நிலை இந்தப் பெண்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை புரிந்துகொள்வதற்கு இந்த நாட்டிலுள்ள தேசங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்பாக அறிந்து கொள்ளவது பயனுள்ளதாகும்.
இலங்கை: இரு தேசங்களும் தேசியமும்
இலங்கை என்ற நாடு தேசம்> தேசியம்> இனத்துவம்> இனம்> கலாசாரம்> மொழி மற்றும் சமயம் என பல அடிப்படைகளில் பிரிந்து கிடக்கின்றது. இதற்கும் மேலாக பால்> பால்தன்மை> பாலுறவு அடிப்படையிலும் பிரிந்துகிடக்கின்றது. தமக்குள் இவ்வாறு பல பரிவுகள் இருந்தபோதும் இந்த நாடும் அங்கு வாழுகின்ற தமிழ் சிங்களம் பேசுகின்ற சமூகங்கள் பொதுவாகவும் பிரதானமாகவும் இரண்டு தேசங்களாக பிரிந்துகிடக்கின்றன. சிந்தியா என்லோவ் (Cynthia Enloe) என்கின்ற பேராசிரியரும் பெண்ணிலைவாதியினதும் கூற்றின்படி இவ்வாறான “தேசங்களுக்கு ஒரு பொதுவான கடந்தகால வரலாறும் எதிர்காலத்தை நோக்கிச் சொல்வதற்கான பொதுவான நோக்கமும்” வழமையாக இருக்கின்றன. இவை இவர்களது “பொதுவான மொழியாலும் மற்றும் தேசியம் அல்லது தேசியவாதத்தின் மீது இருக்கின்ற நம்பிக்கையாலும்” மீண்டும் மீண்டும் வலுயுறுத்தப்படுவதுடன் ஆழமாக வேருன்றவும் செய்யப்படுகின்றன என வாதிடுகின்றார். அதவாது இவ்வாறன “பொதுவான தேசிய அடையாளத்தை ஒன்றினைந்து உருவாக்கப்பட்ட தேசிய மேலாதிக்கம்” எனவும்> இது “ஒரு குறிப்பிட்ட இனக் குழுமத்தை கட்டமைக்க உதவுவதுடன் “மற்ற” இனக் குழுமங்களிலிருந்து தம்மை; தனித்துவமானவர்களாக வேறுபடுத்தவும் உதவுகின்றது” என்கின்றார் நிர்லா யூவல் டாவிஸ் (Nira Yuval-Davis). இவ்வாறு “ஒன்றினைத்து உருவாக்கப்படும் தேசிய மேலாதிக்கத்திற்குள் ஒரு நாட்டில் இருக்கின்ற அனைத்து சமூகங்களும் உள்ளடக்கப்படுவதில்லை” என மேலும் கூறுகின்றார் (Yuval-Davis). இந்தக் கூற்றினடிப்படையில் இலங்கையில் காணப்படுகின்ற சிங்கள பௌத்த தேசிய மேலாதிக்கத்pற்குள் எவ்வாறு தமிழ் பேசுகின்ற சமூகங்கள் ஒரு பகுதியாக உள்ளடக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
ஒரு நாட்டில் உள்ள அனைத்து இனக்குழுமங்களும் காலனித்துவத்தால் பாதிக்கப்பட்டவை என என்லோவ் (Cynthia Enloe) கூறுகின்றார். ஆனால் இந்த “இனக்குழுமங்களுக்குள் ஒன்று இனவாதத்தை வெளிப்படுத்துவதாகவும் மற்றைய இனக்குழுமங்கள் இந்த இனவாதத்தாhல்; பாதிக்கப்படுகின்றவையாகவும் இருக்கின்றது” என வாதிடுகின்றார் (Cynthia Enloe). இலங்கையைப ;பொறுத்தவரை காலனித்துவத்திற்கு முதல் இந்த நாடு இரு தேசங்களாக அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஆட்சியமைப்புகளை கொண்டதாக இருந்தது என்பது வரலாறு. ஆனால் காலனித்துவமானது இந்தப் பிரிவினைகளை இல்லாது செய்து ஒரு ஆட்சியின் கீழ் முழு நாட்டையும் கொண்டுவந்ததுடன் சிங்கள தலைவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை விட்டுச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக சிங்கள பௌத்த மேலாதிக்கம் ஆழமாகவும் பரந்தளவிலும் கட்டமைக்கப்பட்டது. இதன் ஒரு குறியீடே சிலோன் என்ற பெயர் சிறிலங்காவாக மாறியது எனலாம். இவற்றின் விளைவாக தமிழ் பேசுகின்ற சமூகங்கள் புறக்கணிக்கப்பட்டதையும் பாதிப்புகுள்ளனதையும் காணலாம். இதேவேளை இலங்கையில் தமிழ் சமூகங்கள் சிறுபான்மையாகவும் அதிகாரமற்றவர்களாகவும் இருந்தபோதும் தமிழ் தேசியமானது சிங்களவர்களுக்கு எதிராக மட்டுமல்ல தமது சமூகங்களுக்குள் இருக்கின்ற சிறுபான்மை இனக் குழுமங்களுக்கும் எதிரான இனவாதக் கூறுகளைக் கொண்டிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வாறு ஒரு சமூகத்திற்குள் இனவாதக் கூறுகள் இருப்பதானது> அந்த சமூகத்திற்கு எதிராக ஆதிகாரத்திலுள்ள இன்னுமொரு சமூகம் போர் ஒன்றை தொடுப்பதற்கான அதிகாரத்தையோ உரிமையையோ அவர்களுக்கு வழங்கிவிடாது. ஆனால் உலக வரலாற்றில் அவ்வாறான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது அல்லது தாமாகவே பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம்
சிறிலங்கா அரசானது தமிழர்களுக்கு எதிரான ஒரு போரையும் இன அடக்குமுறையையும் மேற்கொள்வதற்காகப் மேற்குறிப்பிட்பட்ட சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை இன மற்றும் மதவாத அடிப்படையில் குறுகிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தின என்றால் மிகையில்லை. இதற்காக சிறிலங்கா அரசானது இன முரண்பாட்டை பல்வேறுவகைகளில் இனவாத சட்டங்களா இயற்றியும்> இன அழிப்பாக செயற்பட்டும்> இறுதியாக பயங்கரவாத முத்திரையும் குத்தியும்; ஊக்குவித்தது. இவ்வாறன தமிழினத்தின் மீதான அடக்குமுறையே தமிழ் இளைஞர்கள் 1970களில் ஆயுதம் ஏந்துவதற்கு காரணிகளாக இருந்தன (Qadri Ismail). இந்த தமிழ் இளைஞர்கள் அதிகமாக ஆண்கள் பல்வேறு குழுக்களாக இயக்கங்களா வளர்ந்து பெருகின. ஆனால் சிலர் (Qadri Ismail) குறிப்பிடுவதுபோன்று இந்த இளைஞர்கள் மேல்தட்டு வர்க்கத்தினரோ அல்லது உயர் சாதி எனக் கூறப்படுகின்றவர்களோ அல்ல. மாறாக பல்வேறு வர்க்கப் பிரிவுகளிலிருந்தும் சாதிகளிலிருந்தும் இணைந்து கொண்ட இவர்ககளுக்கு பலவிதமான சிந்தனைப் போக்குகள் இருந்தன என்பதை போராட்ட சூழலில் வாழ்ந்த (1983-90) என்னால் சாட்சியாக காணக்கூடியதாக இருந்தது. (இது தொடர்பான ஆய்வு இதுவரை செய்யப்படாது இருக்குமாயின் இனிமேலாவது செய்வது பயனுள்ளதாகும்). இவர்கள் தமது வேவ்வேறு சிந்தனைப்போக்குகளை உண்மையாக பின்பற்றினார்களோ இல்லையோ ஆனால் அவர்களது அரசியல் செயற்திட்ட ஆவணங்களிலும் துண்டுப்பிரசுரங்களிலும் வெளியிட்டன. இவ்வாறன “தேசியவாத எழுச்சிகள் இராணுவ மயப்படும் பொழுது ஆண்களுக்கான சலுகைகள் ஆதிக்கங்கள் மேலும் மேலும் அதிகரிக்கின்றது” என என்லொப் குறிப்பிடுகின்றார் (Cynthia Enloe). தமிழ் விடுதலை இயக்கங்களிலும் இதுவே நடைபெற்றது. இதனால்தான் போராட்டங்களின் ஆரம்பங்களில் “எங்கட பொடியள்” என்றும் “ இயக்கப் பொடியள்” என்றும் பொதுமனிதர்களால் அழைக்கப்பட்டது மட்டுமல்ல> இயக்கம்; “போராடி விடுதலையைப் பெற்றுத்தறுவார்கள்” என்ற ஆழமான அதீத நம்பிக்கைளை வைத்திருந்தனர். “இயக்கப் பொடியல்”என அழைக்கப்பட்ட இந்த இயக்கங்களில் எல்லாம் பெண்கள் இருக்கவில்லையா?
பெண்கள்: தமிழ் தேசிய விடுதலைப் போராட்டதில்…
பெண்களும் இக் காலங்களில் விடுதலை இயக்கங்களில் பங்குபற்றி தமது (சமூகத்தால் வரையறுக்கப்பட்ட) பெண்பாலுக்குரிய மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் வேலைகளை செய்தனர். பலர் ஆயுதம் தூக்கிப் போராளிகாளா போராடவும் தயாராக இருந்தனர். இதேவேளை பல இயக்கங்கள் சாதி வர்க்க முரண்பாடுகள் தொடர்பாக மட்டுமல்ல பெண்களின் பிரச்சனை தொடர்பாகவும் அக்கறை கொண்டிருந்தனர். ஆனால் இது தொடர்பான பிரக்ஞை தொடர்ச்சியாக இருந்ததா என்றால் அது கேள்விக்குறியே. ஆனாலும் கொள்கையளவில் முன்வைத்து செயற்பட்டனர்.. முதல் தமிழ் பெண் (குழந்தைப் போராளி) ஆயுதபாணியான சோபா என அழைக்கப்பட்ட மதிவதனி 1985ம் ஆண்டு காரைநகர் இராணுவ முகாமைத் தாக்கியபோது இறந்ததாக ஈபிஆர்எல்எப் இயக்கம் அறிவித்தது. இதேவேளை விடுதலைப் புலிகள் பெண்களை இயக்கத்திற்குள் இணைப்பதற்கு ஆரம்பத்தில் தயக்கம் காட்டினர். இதற்கு இவர்களது இயக்கத்தில் மற்ற இயக்கங்களைவிட ஒப்பிட்டளவில் ஆழாமாக இருந்த ஆணாதிக்க சிந்தனையும் அதனையொற்றிய கலாசராத்தை அதிகமாக மதித்தமையும் நம்பியமையும் காரணமாக இருக்கலாம். இதற்காக மற்ற இயக்கங்கள் இவ்வாறான ஆணாதிக்க சிந்தனைப் போக்குகள் அற்றவை என்பது அர்த்தமல்ல.
வெள்ளையினத்தின் சமூக அந்தஸ்து
இதேநேரம் தமிழ் பெண்கள் இயக்கங்களில் இணைந்ததற்கு ஊந்துசக்தியான காரணமாக பேசியல் சமாத்தின்hல் (Feizal Samath) கூறப்படுகின்ற ஒரு கூற்று விமர்சனத்திற்குரியது. இவர் கூறுகின்றார் அடெல் பாலசிங்கம் (Adele Balasingham) தனது கணவருடன் மேடைகளில் இருந்ததமையும் அவருடன் சரிநிகர் சமானமாக பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியதையும் கண்ட தமிழ் பெண்களுக்கு அவரது செயற்பாடுகள் நம்பிக்கையளித்தது என்கின்றார் (Feizal Samath). அவர் மேலும் கூறும் பொழுது இவ்வாறான ஒரு காட்சியை தமிழ் சமூகத்தில் காணமுடியாது என்பதால் தமிழ் பெண்கள் இதை நோக்கி கவரப்பட்டார்கள் என்கின்றார். இவரின் இவ்வாறன விவாதம் அர்த்தமற்றது மட்டுமல்ல அதிமேதாவித்தனமானதுமாகும். ஏனனில் இவர் இரண்டு விடயங்களை மறந்துவிட்டே இவ்வாறு எழுதுகின்றார். முதலாவது அடெல் பாலசிங்கத்தின் வருகைக்கும் அவர் போராட்டத்தில் பங்குபற்றுவதற்கும் முன்பே> தமிழ் தேசிய விடுதலைக்கான அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டத்தில் தமிழ் பெண்களின் பங்களிப்பானது காத்திரமாகவும் கணிசமாகவும் இருந்துள்ளது என்பதை பல ஆதராங்களுடன் வரலாற்றில் காணலாம். இரண்டாவது அடெல் பாலசிங்கத்தை ஒரு பெண்ணாக மட்டுமே பார்த்து தனது கருத்தை சமாத் (Feizal Samath) முன்வைத்துள்ளார். ஆனால் அவரை ஒரு வெள்ளையின பெண்ணாகவும் வெள்ளையினத்தின் பிரதிநிதியாகவும் அவரை அடையாளங் காணாதது மட்டுமல்ல அவ்வாறன ஒரு வெள்ளையின பெண்ணிற்கு> இவ்வாறான (தமிழ்) (காலினியாதிக்கத்திற்குட்பட்ட) சமூகங்களில்> எவ்வாறான அந்தஸ்து மற்றும் சலுககைகள் இருக்கின்றன என்பதையும் கவனிக்கத்தவறியுள்ளார்.
இதைத்தான் பிராங்பேர்க் (Ruth Frankenberg) பின்வருமாறு குறிப்பிடுகின்றார். அதாவது வெள்ளைத்தன்மைக்கு (Whitness) சமூக கட்டமைப்பில் ஒரு குறிப்பான முக்கிய இடமும்> சலுகைகளும்> அந்தஸ்தும் உள்ளது எனவும் இவை நாடுகள் தேசங்கள் கடந்து எங்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆக்கப்பட்டிருக்;கின்றது எனவும் கூறுகின்றார் (Ruth Frankenberg). இவ்வாறன ஒரு அடிப்படையிலையே தமிழ் சமூகத்தில் அடெல் பாலசிங்கத்தின் இருத்தலை பார்க்கவேண்டியுள்ளது. ஏனனில் தமிழ் சமூகத்தில் அவருக்கான மரியாதை மட்டுமல்ல அதிகாரம் கூட தமிழ் ஆண்களுக்கு இருந்ததைவிட அதிகமாகவே இருந்திருக்கலாம். இவ்வாறன அதிகாரத்தையும் மரியாதையையும் அளித்தமை தமிழ் பேசும் மனிதர்களிடம் பிரக்ஞையற்று இருக்கின்ற தமது முன்னால் எஜமானர்களான காலனித்துவற்கான அடிமைத்துவ பண்பாக கூட இருக்கலாம். இவ்வாறன ஒரு அனுபவத்தையும் விவாதத்தையும் பனோன் (Fanon) தனது சுழலில் கருப்பு ஆணுக்கும் வெள்ளையின பெண்ணுக்கும் இடையிலான ஒப்பிடுதல்மூலம் முன்வைக்கின்றார். இவ்வாறன ஒரு விமர்சனம் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அடெல் பாலசிங்கத்தின் பங்களிப்பை எந்தவகையிலும் நிராகரிப்பதாகவோ குறைத்து மதிப்பிடுவதாகவோ இருக்காது. மாறாக இந்த விமர்சனமானது பேசியல் சமாத்தின் கூற்றினை மட்டுமே விமர்சிப்பதாகும். ஆனால் தமிழ் பெண்கள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றியதன் மூலம் தமது கனவான விடுதலையை சுதந்திரத்தைப் பெற்றர்களா என்பது கேள்விக்குறியே.
பெண் போராளிகள்
சர்வதேசளவில் இவ்வாறான இயக்கங்களிலும் வன்முறைப் போராட்டங்களிலும் பெண்கள் 20 லிருந்து 40 வரையான விதத்தில் இணைவது அதிகரித்து இருக்கின்றது என நிம்மி கௌரிநாதன் குறிப்பிடுகினற்hர் (Nimmi Gowrinathan). ஆனால் இந்தப் பெண்களை தொடர்புகொள்வதில் உள்ள தடைகளால்> அவர்கள் இவ்வாறன இயக்கங்களில் இணைவதற்கு உந்துசக்தியாக என்ன இருக்கின்றது என்பதை அறிவது கஸ்டமானது என்கின்றார். ஆகவே அவர்கள் இணைந்ததற்கான காரணங்களை உறுதிப்படுத்த முடியாதுள்ளது என்கின்றார். இதற்கு மாறாக இவ்வாறான தேசியவாத ஆயுதப் போராட்ட இயக்கங்களில் இணைவதற்கு சில புறக் காரணிகள் காரணமாக இருந்தன என அலிசா ஸ்டக் ஓக்கோனர் (Alisa Stack-O’Connor) கூறுகின்றார். அதவாது தமிழ் இயக்கங்களை குறிப்பாக புலிகளைப் பொருத்தவரை> சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக பெண்களை தந்திரோபாயா அடிப்படையில ;பயன்படுத்தக் கூடியதாக இருந்தமையும் மற்றும் மற்ற இயக்கங்களுடன் போட்டி போட வேண்டி இருந்தமையும் காரணங்கள் என்கின்றார். மேலும் பெண்களின் நிலையில் வேறு பல காரணங்கள் இருந்தன என்கின்றார் அலிசா ஸ்டக் ஓக்கோனா (Stack-O’Connor). சிறிலங்கா இராணுவத்தின் பயங்கரமான தாக்குதல்களும் அவர்கள் மீதிருந்த பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்புணர்வுகள் தொடர்பான பயமும் தமிழ் பெண்கள் இயக்கங்களில் இணைவதற்கு காரணமாக இருந்தது என்கின்றனர் (Stack- O’Connor). பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் சித்தரவதைகள் வன்புணர்வுகள் என்பன ஆணாதிக்க பார்வையில் முன்னெடுக்கப்படும் போர்களின் போது முக்கியமான பாலியல் போர்க் கருவிகளாக எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தேசிய விடுதலைப் போராட்டங்கள்> பெண்களின் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் பெண்களது எதிர்கால விடுதலைக்கான தந்திரோபாயங்களை வகுப்பதற்கான அடிப்படைகளை கொண்டிராத போதும்> பெண்கள் தேசிய விடுதலைக்கு ஆதரவளிக்க ஊக்குவிக்கப்படுகினறனர் என்கின்றார் என்லோவ் (Cynthia Enloe). இதன் விளைவாகதான் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் பங்குபற்றுவது என்பது அவர்களது விடுதலைக்கு வழியேற்படுத்தாது என்பதை இலங்கையில் நடைபெற்ற போரிற்கு முன்பான பின்னான அல்லது போரின் போதான சம்பவங்கள் சாட்சியம் கூறுகின்றன.
பெண்களும் தேசியமும்
மக்கின்டோக் (Mclintock) (தேசிய) இனத்திற்கும் மற்றும் பால் அல்லது பால் தன்மைக்கும்; இடையில் நெருங்கிய உறவு இருக்கின்றது எனக் குறிப்பிடுகின்றார். அதாவது தேசியவாதத்திற்குள் பெண்கள் ஜந்து வகைகளில் பிணைக்கப்பட்டுள்ளனர் என்கின்றார். முதலாவது சந்ததியை மீள்ளுருவாக்கம் செய்பவர்களாகவும் தேசத்தின் எல்லைகளை வரையறுத்து காப்பவர்களாகவும்> தேத்தின் கலாசாரத்தை உருவாக்கி புதிய தலைமுறைக்ககு பரிமாறுகின்றவர்களாகவும்> தேசத்தின் குறியீடாகவும் அந்த தேசத்தின் விடுதலையில் முக்கியமான பங்காளர்களாகவும் என இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளனர் என்கின்றார் (Mclintock). ஆகவே தேசியவாதத்தின் பொதுவான அடிப்படையில் பெண்கள் என்பவர்கள் ஒரு தேசித்தின் குறியிடாகவும் அதன் வேராகவும் ஆன்மாவாகவும் கட்டமைக்கப்படுகின்றார்கள் என்கின்றார் யூவல் டாவிஸ் (Nira Yuval-Davis). மேலும் இப் பெண்கள் தேசியவாதத்தின் அடிப்படையில் மிகவும் உயர்வாக மதிக்கப்படுவதுடன் தமது இன மற்றும் கலாசாரங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றவர்களாகவும் அதன் எல்லைகளை ;வரையறுப்பவர்களாகவும் உருவாக்கப்படுகின்றனர் என்கின்றார் (Nira Yuval-Davis ). மேலும் தேசியவாதிகள் நிலத்தை தாய்நிலம் என்பதன் மூலமாக எவ்வாறு நிலமானது பெண்தன்மையுள்ளதாக மாற்றப்படுகின்றது என்ற எட்வேட் சேயிட்டின் (Edward Said) கூற்றும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று (Mclintock). இது மட்டுமல்ல பெண் உடல்களின் மீது இருக்கின்ற ஆதிக்கமும் மேலாதிக்க சிந்தனையும் பொதுவாக பெண்களை ஒரு இனத்தின் சந்ததிகளைப் பெறுக்குகின்ற குழந்தை பெறுகின்ற இயந்திரமாகவே குறுக்கிவட்டது என்கின்றார் மக்கின்டோக் (Mclintock). ஒரு தேசத்தின் பெண்கள் தொடர்பான இவ்வாறன பார்வையானது தந்தையாதிக்க இருபாலுறவு பார்வையே என்றால் மிகையல்ல.
.
நமது சமூகங்களில் பெண்களுக்கு எதிரான போக்கில் பெண்களை ஜடமாக> பொருட்களாக குறுக்கின்ற தன்மையையும் அவ்வாறே பயன்படுத்துவதையும் அவதானிக்கலாம். தந்தையாதிக்கடிப்படையில் அமைந்த இரு தேசியவாதமும் அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட போரும் எவ்வாறு பெண்களை பொருட்களாக பார்த்தன பயன்படுத்தின என்பதை உற்று நோக்குவது இது தொடர்பான விடயங்கிளில் நம்மை மேலும் விழிப்படையவும் பிரக்ஞையாக இருக்கவும் உதவும். ஆண்களின் ஆணாதிக்க பார்வையானது பெண்களை பாலியல் பண்டங்காளாகவும் நமது கற்பனைத் தேவைகளுக்கும் விருப்பங்களும் ஏற்ப எப்பொழுதும் பயன்படுத்தக்கூடிய பொருட்காளாக பார்ப்பதாகவுமே இருந்து வந்திருக்கின்றது. இதற்கு ஆணாதிக்க பாலியல் சிந்தனை ஆதிக்கத்திலிருப்பதானது> பொதுவாக மனிதர்கள்> குறிப்பாக ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செய்வதற்கு காரணம் என அன்றே லோர்ட் குறிப்பிடுகின்றார் (Audre Lorde ). சுpங்கள தேசியவாதமும் தமிழ் தேசியவாதமும் இரு வேறுவேறு கருத்தாக்கங்களாக இருந்தபோதும் சிறிலங்கா இராணுவமும் தமிழ் ஊடகங்களும் தமிழ் பெண்களை ஜடங்களாகவும் பாலியல் பண்டங்காளகவும் பார்ப்பதிலும் வெளிப்படுத்துவதிலும் பயன்படுத்துவதிலும் மற்றும் “எல்லைக் காவலர்கள்” என்ற குறியிடாகவும் “நாம்” “அவர்கள்” என்கின்ற வேறுபாட்டை கட்டமைப்பதிலும் (Yuval-Davis ) பொதுவான தன்மையையே கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் இவ்வாறு பார்ப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் ஆணாதிக்க சிந்தனை பொதுவானதாக இருந்தபோதும் தமது வேறுபட்ட தேசியவாதத்தின் அடிப்படையில்; வேவ்வேறு வகையான நோக்கங்கள் இருக்கின்றன என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
பெண்கள்: பொருட்களாக…போரின் கருவிகளாக…..
இப் படங்களில் விடீயோக்களில் காண்பிக்கப்படுகின்ற இறந்த உடல்களைக ;கொன்றது யாராகவும் இருக்கலாம். ஒரு அமெரிக்க இராணுவத்தினராகவோ சிறிலங்கா இராணுவத்தினராகவோ அல்லது தலிபானாகவோ அல்லது என் தமிழ் இயக்கப் பொடியலாகவோ இருக்கலாம். கொல்வது யாராக இருந்தாலும் இந்த உடல்களை நோக்கிய அவர்களது பார்வை என்பது பொதுவானதாக அல்லது ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றது எனலாம். ஏனனல் இந்த இறந்த மனித உடல்களை; இவர்கள் பண்டங்களாக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இவை ஒரு தேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன குறியீடுகளே. ஸ்டாட் றோல் (Stuart Hall) என்ற சமூக ஆய்வாளரைப் பொறுத்தவரை இவ்வாறான படங்கள் வெறும் யதார்த்தததை பிரதிபலிக்கும் படங்கள் அல்ல மாறாக இவ்வாறு படங்களினுடாக பிரதிநிதித்துவப்படுகின்ற குறியீடுகள் தொடர்ச்சியான ஆழமான அரசியல் தன்மைகளைக் கொண்டவை எனக் கூறுகின்றார். இந்தடிப்படையில் இங்குள்ள படங்களில் உள்ள இறந்த மனித (ஆண் பெண்) உடல்கள் தமிழ் இனத்தின் உடல்களாக> தமிழ் தேசத்தை பிரதிநிதித்துவம் செய்பவனவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களின் உடல்கள் பாலியல் பண்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் சிறிலங்கா இராணுவத்தால் அனைத்து உடல்களும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டும் பெண்கள் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் அசிங்கப்படுத்தப்பட்டும் அவமதிக்கப்பட்டுமுள்ளன.
சுpறிலங்கா இராணுவமானது தமிழ் பெண்களை தமிழ் தேசத்தின் பிரதிநிதிகளாகவும் குறியிடுகளாகவும் இனவாதத் தன்மையுடனும் மற்றும் பாலியல் பண்டங்களாக ஆணாதிக்க தன்மையுடனும் பார்த்து அவர்களை சித்திரவதை செய்தும் வன்வுணர்வுக்கு உட்படுத்தியும் கொலை செய்தனர். இது தொடர்பாக வெளிவருகின்ற படங்கள் மற்றும் விவரணங்கள் இவர்களது ஆணாதிக்க சிங்கள தேசியவாத பார்வைக்கு முக்கியமான சான்றாகும். ஊதாரணமாக குறிப்பிட்ட விவரணப் படத்தில் ஒரு சிறிலங்கா இராணுவத்தினர் இறந்த ஒரு பெண்ணின் யோனியைப் பார்த்து “ இது நல்ல சமான்” என்றும் “உடம்பு இன்னும் சூடாகத்தானிருக்கிறது” எனவும் கூறுகின்றார். இன்றுமொருவரோ “அப்பெண்ணின் முலைகளில் சுடு” என்கின்றார். இதைவிட மோசமாக இதற்கு மேலும் யாரும் கதைக்க முடியாதளவு கீழ்த்தரமான மனிதாபிமானமற்ற அருவருப்பான வசனங்கள் இவை என்றால் மிகையல்ல. மேலும் இவை ஒரு தேசத்தை ஆக்கிரமித்து அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி வன்புணர்வுக்;கு உட்படுத்துகின்றோம் என்பதை இப் பெண்களின் உடல்களினுடாக இந்த இராணுவத்தினர் செயற்படுத்துகின்றனர். இதன்மூலம் இவர்கள் தமது ஆணாதிக்க தன்மையையும் சிங்கள இனவாத தன்மையையும் வெளிப்படுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றுகின்றனர். இதற்கு மாறாக ஒரு சில இராணுவத்தினர் இந்த உடல்களை துணியால் முடியதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இவ்வாறன ஒரு சிலரின் சில நல்ல பக்கங்கள் சிறிலங்கா இராணுவத்தினரிடமிருக்கின்ற சிங்கள இனவாத ஆணாதிக்க தேசியவாதத்தை மறுத்துவிடாது..
பெண்கள் வாழும் பொழுது மட்டுமல்ல இறந்த பின்பும் அவரர்களது உடல்கள் இந்த தந்தையாதிக்க சமூகத்தால் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டு ஒவ்வொரு தேசங்களதும் பல்வேறு நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன என்பதையே இவ்வாறன செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. இதனால்தான் தேசிய விடுதலைப் போராட்டத்தல் பெண்கள் அடக்கப்படுகின்ற தமது ஆண்களுக்கும் எதிரியின் தேசத்து ஆண்களுக்கும் இடையில் அகப்பட்டு நசுக்கப்பட்டு அல்லல்படுகின்றனர் என்கின்றார் ஸ்மையில் (Ismail). அதவாது ஒரு புறம் தமது தேசத்தின் ஆணாதிக்க தேசியவாத பார்வைக்கு ஏற்ப ஆண்களுக்கு கட்டுப்பட்டு அப் பெண்கள் தமது தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதற்கான புதிய தலைமுறையை உருhவக்கவும் அத் தேசத்திற்காக போராடவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்;. மறுபுறம் மேற்குறப்பட்ட காரணங்களுக்காகவே ஒரு தேசத்தின் இராணுவம் தனது எதிரி தேசத்தை ஆக்கிரமித்து அடக்குகின்றபோது அத் தேசத்தின் பெண்களையே முதல் குறியாக கொண்டு பலவகைகளில் தாக்குகின்றனர். இதனாhல் தான் இன்றைய உலகத்தின் அரசியல் செயற்பாடுகளில் “தேசியவாத பெண்ணிலைவாதியாக பெண்கள் வாழ்வது என்பது; மிகவும் கஸ்டமான காரியம்” என என்லோவ் (Enloe) வாதிடுகின்றார். ஏனனில்; தேசியவாத கருத்தியல்கள் விளையாடுகின்ற ஒரு போர்க்களமாக பெண்களும் அவர்களது உடல்களும் பயன்படுத்தப்படுகின்றன என்கின்றார் காயத்திரி கோபிநாத் (Gayatri Gopinath). மேலும் பெண்கள் ஒரு முக்கியமான சக்தியாக ஆண்களின் பொறிக்குள் அகப்பட்டுள்ளவர்களாக இருக்கின்றனர் என்றும் இவர்கள் மாற்றத்திற்கான காரணகர்த்தாக்காளாகவோ அல்லது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றக் கூடியவர்களாகவோ இல்லை எனவும் மக்கின்டோக் வாதிடுகின்றார் (McClinntock). ஏனனில் இவ்வாறுதான் ஆணாதிக்க இருபாலுறவு சமூகமானது பால்> பால்தன்மை> பாலுறவு என்பவற்றைக் கட்டமைத்து அதற்காக அதிகாரங்களையும் அதிகார படிமுறைகளையும் வழங்குகின்றது. இந்தடிப்படையில் தான் பெண்களை நிலத்துடன் ஒப்பிட்டும் தேத்தின் குறியிடாக பயன்படுத்தியும்; அவர்களுக்கான கடமைகளையும் சமூக அந்தஸ்துகளையும் தீர்மானித்தும் சுரண்டப்படுகின்றனர். ஆகவேதான் பெண்கள் அடக்குகின்ற தேசத்தன் ஆண்களுக்கும் அடக்கப்டுகின்ற தேசத்தின் ஆண்களுக்கும் இடையில் அகப்பட்டு வதைபடுகின்றனர்.
பெண்கள் : இரண்டாம் பிரஜைகளாக…..
இந்தடிப்படைகளில் சமூகத்திலிருந்த பெண்களின் நிலையை தமிழ் இயக்கங்களில் இருந்த பெண்களின் நிலைகளுடனும் ஒப்பிடலாம். ஏனனில் புலிகள் உட்பட அனைத்து தமிழ் இயக்கங்களும் ஆணாதிக்க தன்மையையும் பார்வையையும் வெளிப்படுத்தின என்றால் தவறுமல்ல மிகையுமல்ல. ஒருவரும் விதிவிலக்காக இருக்கவில்லை. ஏனனில் அனைத்து இயக்கங்களும் புலிகள் உட்பட பெண்களை முதலில் நிர்வாக வேலைகளிலும் முதலுதவிப் பணிகளிலும் மற்றும் சண்டையிடுகின்றன ஆண்களுக்கு உதவியாளர்களுமாகவே பயன்படுத்தினர் (Stack-O’Connor). குறிப்பாக புலிகளின் தலைமை பெண்களை இயக்கத்திற்கு இணைப்பதற்கு ஆரம்பத்தில் தயக்கம் காட்டியது. பெண்களை உள்வாங்கிய பின் மனித மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பாக பல்வேறுவிதமான கட்டுப்பாடுகளையும் ஒழுக்க நெறிகளையும் உருவாக்கி மிகவும் இருக்கமாக பின்பற்றியது. இவை இயக்கத்திற்குள் மட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை இயக்கத்திற்கு வெளியில் வைத்திருக்கும் உறவுகளுக்கும் இவை பொருந்தும். ஆரம்பத்தில் அதாவது 80களின் இறுதியில் பெண் போராளிகள் சீதனத்திற்கு எதிரான சட்டங்கள் போடும் படி புலிகளின் தலைமையிடம் கேட்டதாக அறியப்படுகின்றது. ஆனால் தலைமையோ சமூகத்துடன் கலந்துரையாடி ஒரு முடிவு எடுத்துக் கொண்டு வாருங்கள் என அப் பெண்களை திருப்பியனுப்பியதாக அப்பொழுது செய்திகள் பரவின. இதன் ஒரு பகுதியாகத்தான் சீதனம் தொடர்பாக அன்டன் பாலசிங்கம் இருநிலைப்பாடுகளிலிருந்து கருத்துக்களை முன்வைத்து ஒரு கலந்துரையாடலை தமிழ் பத்திரிகையில் முன்னெடுத்தார் என குறிப்பிடப்படுகின்றது. ஆனால் பொது மனிதர்கள் இடம் விட்டு இடம் செல்வதற்கான “பாஸ்” முறைகளை சமுகத்துடன் எந்தவிதமான கலந்துரையாடல்களும் இன்றி உடனடியாக புலிகள்pன் தலைமை அமுல்படுத்தின என்பது கவனிக்கத்தக்கது. ஆகவே பெண்கள் விடயத்தில் ஆரம்பத்தில் அக்கறை குறைந்தவர்களாகவே இருந்துள்ளனர். இது புலிகள் இயக்கம் தொடர்பான விமர்சனம்hக மட்டும் குறுக்கிவிடவேண்டாம். இது அவர்களது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான விமர்சனமே. ஏனனில்> இன்று புலிகள் இயக்கம் இல்லாதபோதும் அவர்களது அரசியல் கருத்தாதிக்கமானது இன்றும் ஆதிக்கத்திலிருப்பது மட்டுமல்ல முன்னெடுக்கப்படுவதாலும் இந்த விமர்சனமானது முன்வைக்கப்படுகின்றது.
சில காலங்களின் பின் இக் கட்டுப்பாடுகளிலும் ஒழுக்க நெறிகளிலும் சில தளர்வுகளை மேற்கொண்டு இயக்கத்திற்குள் இருந்தவர்களுடனான திருமணங்களை புலிகள் இயக்கம் அங்கிகரித்தனர். சமூகளவில் பெண்களுக்கு எதிராக இருந்த சீதன முறைமைக்கு எதிராக சட்டங்கள் இயற்றின. மறுபுறம் சீதனம் பரிமாறப்படுவதை தடுக்க முடியாதபோது அதற்கான வரிகள் அறவிடப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இதேபோல் பெண்கள் தமது ஆற்றல்களை தொடர்ந்தும் நிறுபித்து ஆண்களுக்கு நிகராக சிறிலங்கா படைகளுக்கு எதிரான பல போர்களிலும் ஈடுபட்டனர். இதேவேளை புலிகள் இயக்கத்திற்குள் “சுதந்திர பறவைகள்” என்ற ஒரு பெண்கள் அணியையும் புலிகளின் தலைமை தோற்றுவித்தனர். சமூகத்திலிருந்த சாதாரண அதாவது புலிகளின் இயக்கத்தில் இல்லாத பெண்களைவிட சுதந்தர பறவைகள் அணியிலிருந்த பெண்களுக்கு விசேசமான அந்தஸ்து சமூகத்தில் இருந்தாக கூறப்படுகின்றது (Stack-O’Connor). இதேவேளை இந்தப் பெண்கள் சுய தெரிவுகளை முன்னெடுக்கக் கூடியவர்களாக இருந்தபோதும் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பர்டுகளையும் குறிப்பான சுழல்களில் பல்வேறு அதிகாரத்துவ படிமுறைகளின் கீழ் செயற்படவேண்டியுமிருந்தனர் என்கின்றார் அலிசன் (Alision in Nimmi Gowrinathan). அதாவது ஒரு ஆணாதிக்க சுழலுக்குள் ஆண்களின் கருத்தியல் பார்வையிலும் வழிகாட்டலிலும் பெண்கள் செயற்பட்டனர். இதனால்தான் போரின் பின் இதே பெண் போராளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இன்று முக்கியமான கவனத்திற்குரியதாக இருக்கின்றன. இவை புறக்கணிக்கப்படக் கூடியவையல்ல.
சிங்கள> தமிழ் சமூகங்கள் பிற சமூகங்களைப் போலவே பொதுவாகவே பாரம்பரிய ஆணாதிக்க இருபாலுறவு முறைகள் ஆதிக்கம் செலுத்துகின்ற பாலியல் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட சமூகங்களே. மேலும் இவை பால்> பால் தன்மை> பாலுறவு தொடர்பாக பிற்போக்கான பார்வை கொண்டவையே. இதனால் இங்குள்ள மனிதர்கள் பால்> பால்தன்மை> பாலுறவுகளின் அடிப்படையில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது மட்டுமல்ல ஒவ்வொரு பாலுக்குமான பாத்திரங்களும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன (De Alwis). ஏட்வாட் சைட் (Edward Said ) குறிப்பிடுவது போன்று பெண்கள் கலாசார மறுஉற்பத்தி செய்வதற்காக இனப்பெருக்க உற்பத்தியாளர்களாவும் பயன்படுத்தப்படுகின்றனர் (Eng). இதன் மறுபக்கமாக பெண்கள் தமது கலாசார ஆதிக்கத்திற்கு ஏற்ப இனப் பெருக்கம் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றனர். அதாவது ஒரு புறம் கலாசாரத்தை கட்டமைப்பதற்கு இனபெருக்கம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்ற பெண்கள் மறுபுறம் இக் கலாசார பண்புகள் காரணமாகவே இனப் பெருக்கம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அதாவது சுழற்சிமுறையிலான மீள் உற்பத்தி உருவாக்கம் போன்றதே இது. இது பெண்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவும் ஆண்களுக்கு கீழானவர்களுமாகவே இந்த சமூகங்களில் இருந்துவந்துள்ளனர் என்பதனையே காண்பிக்கின்றது. சமூகத்தில் பெண்களின் இந்த நிலை காரணமாக பலவிதமான பிரச்சனைகளை அவர்கள் தொடர்ந்தும் (இன்றும்) எதிர்நோக்குகின்றனர்.
கைவிடப்பட்ட முன்னால் பெண் போராளிகள்
முன்னால் பெண் போராளிகள் இன்று இலங்கையில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை அறியும் பொழுது குறிப்பாக தமிழ் சமூகம் தனது தந்தையாதிக்க இருபாலுறவு சமூக நோக்கு நிலையிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்றே கருதமுடிகின்றது. (இது ஆச்சரியமானதல்ல என்பது வேறுவியடம்). ஆகவே தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமானது தமக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என தமிழ் பெண்கள் கற்பனைக் கனவு கண்டனர் அல்லது எதிர்பார்த்தது என்பது கற்பனைத்தனமானது என சமாத் (Samath) கூறுவதை உண்மையாக்குகின்றது.; ஏனனில் இரண்டு வருடங்களுக்கு முன்பு பயங்கரவாதம் என்ற பூச்சாண்டியை காரணம் காட்டி போருக்கு காரணமான இன முரண்பாட்டுப் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வைக் காணாது புலிகளின் தலைமையை அழித்ததன் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரானது புதிய பல பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது. அதாவது பெரும் எண்ணிக்கையான முன்னால் போராளிகள்> பெண் போராளிகள் மற்றும் குழந்தைப் போராளிகள் அனைவரது வாழ்க்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. உதாரணமாக பல குழந்தைப் போராளிகள் அநாதரவாக கைவிடப்பட்டுள்ளனர்.
தமது குடும்பங்களுக்குள் முன்னால் பெண் போராளிகளை வைத்திருக்க அவர்களது குடும்பத்தினரே விரும்புகின்றனர் இல்லை என கூறப்படுகின்றது. ஏனனில் இவர்கள் இருப்பதனால் இவர்களது சகோதரிகளை திருமணம் செய்ய “சாதாரண” ஆண்களும் அவர்களது குடும்பங்களும் தயங்குகின்றனர் அல்லது விரும்புகின்றனர் இல்லை. இந்த முன்னாள் பெண் போராளிகளைப் தொடர்பாக முன்பு உணர்ச்சி ததும்ப கதைத்த தமிழ் தேசியவாதிகள் அல்லது பகுத்தறிவு மார்க்சியம் கதைக்கும் மார்க்சியவாதிகள் எத்தனைபேர் இன்று இந்த பெண்களை திருமணம் செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள்.? இந்;த ஆண்களுக்கு அப்பொழுது மட்டுமல்ல இப்பொழுதும் திருமணம் செய்ய தேவையானது கற்புள்ள அடக்கமான அமைதியான குடும்பப் பெண்ணே. ஆகவே இந்த முன்னாள் போராளிப் பெண்கள் இன்று தமது குடும்பங்களுக்கு பாரமாகவும் தமது சகோதரிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தடையானவர்களாகவுமே தமது குடும்ப அங்கத்தவர்களாலும் உறவினர்களாலும் சமூகத்தாலும் கருதப்படுகின்றனர். ஏனனில் இந்தப் பெண்கள் “சாதாரண” பெண்களைப் போல் இல்லை என்பதாலும் ஆணாதிக்க குடும்ப சட்டதி;ட்டங்களுக்கு பொருந்தி வர மாட்டார்கள் என்பதாலும் இவர்களுக்கான மதிப்பு சமூகத்தில் குறைவாகவே உள்ளது. மேலும் பொதுவளியில் இவர்களது நடை உடை பாவனைகள் வேறுபட்டுக் காணப்படும் என்பதாலும் குடும்ப அமைப்பிற்குள் ஏற்பதற்கு தயங்குகின்றார்கள். இவர்கள் இவ்வாறு ஒதுக்கப்படுவதற்கு காரணம் இவர்களிடம் இருக்கின்ற உடல் மற்றும் மனோ பலம் ஆகும். மேலும்; தாங்களே முடிவெடுத்து செயற்படுவத்கு இவர்களுக்கு இருக்கின்றன தன்னம்பிக்கை. இதனால் இவர்கள் யாருக்கும் அது கணவனாக இருந்தபோதும் கீழ் பணிந்து சேவை செய்யவோ அவசியமின்றி மரியாதை செலுத்தவோ முடியாதவர்களாக அல்லது விருப்பமில்லாதவர்களாக இருக்கின்றனர் எனலாம். இதன் காரணமாகதானோ என்னவோ இந்தப் பெண்களை வீரம் விளைந்த போராளிகளாக போற்றிப் புகழ்ந்த புலம் பெயர்ந்த அல்லது பெயர்க்கப்பட்ட சமூகம் கூட இன்று ஆதரவளிக்காது கைவிட்டுள்ளது. பெண்கள் தொடர்பான நமது சமூகத்தினது தந்தைவழியாதிக்க பார்வையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை என்பதையே இவ்வாறான போக்குகள் மீண்டும் மீண்டும் நிறுபிக்கின்றன.
“நாம்” மற்றும் “அவர்கள்”
இறுதியாக ஒரு புறம் நாம் நமது சுதந்திரத்திற்காகப் போராடுகின்றோம். மறுபுறம் “மற்றவர்”களுக்கு அவர்களது சுதந்திரத்தை மறுப்பதுடன் அவர்களை (பிரக்ஞையின்மையாகவாவது) அடக்குகின்றோம். இதை புரிந்துகொள்வதற்கு நாம் செய்கின்ற பேசுகின்ற எழுதுகின்ற ஒவ்வொரு விடயங்களையும் பிரக்ஞையுடன் கவனிக்கும் பொழுது அறிந்துகொள்ளலாம் என நம்புகின்றேன். உதாரணமாக தமிழ் பேசுகின்றவர்களாக சிறிலங்கா அரசால் அடக்கப்படுகின்றோம். ஆகவே தமிழ் தேசிய விடுதலைக்காகப் போராடுகின்றோம். ஆனால் அதேநேரம் பெண்களையும் வேவ்வேறு சாதி அடையாளங்கள் சுமத்தப்பட்டவர்களையும் பிற மதத்தினரையும் இனத்தினரையும் மறுபுறம் “நாம்” அடக்குகின்றோம். அவர்களது உரிமைகளை மறுக்கின்றோம். இதேபோல் புலம் பெயர்க்கப்பட்ட இடங்களிலும் வேற்று நிறம் என ஓதுக்கப்படுகின்ற நாம் அதேநேரம் சீனர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் எதிரான இனவாத போக்குகளை கொண்டுள்ளோம். இது எதை வெளிப்படுத்துகின்றது என்றால் நமது உரிமைகள் சுதந்தரம் தொடர்பாக மட்டுமே நாம் அக்கறை உள்ளவர்களாக இருக்கின்றோம் என்பதையும் நம்மால் அடக்கப்படுகின்றவர்கள் தொடர்பாக அல்லது நம்மிடம் இருக்கின்ற இனவாதம் தொடர்பாகவும் அதை அகற்றுவது தொடர்பாகவும் நமக்கு அக்கறையோ பிரக்ஞையோ இல்லை என்பதையே என்றால் மிகையல்ல. ஆகவே நாம் பிரக்ஞையுடன் புர்pந்துகொள்ளவேண்டியது என்னவெனில் நமது பன்முக அடையாளத்தையே. அதாவது ஒரு புறம் அல்லது ஒரு இடத்தில் அடக்கப்படுகின்ற நாம் மறுபுறம் அல்லது இன்னுமொரு இடத்தில் அடக்குபவராகவும் இருக்கின்றோம் என்பதையே. உதாரணமாக புலம் பெயர் தேசத்தில் வாழ்கின்ற ஆண் ஒருவர் பொதுவெளியில் (வேலைத்தளத்தில்) அவரது நிறத்தால் பலவகையில் புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றார். ஆனால் இதே ஆண் தனது தனிப்பட்ட வெளியில் (வீடு); தனது துணைவியாரையும் குழந்தைகளையும் அடக்குபவராகவும் அவர்களது உரிமைகளை மறுப்பவராகவும் இருக்கின்றார். இவ்வாறன உதாரணம் ஆண்களுக்கும் தமிழர்களுக்கும் மட்டுமல்ல பெண்களுக்கும் அனைவருக்கும் பொருந்தக் கூடியதே. நாம் ஒவ்வொருவரும் ஏதேரா ஒரு வகையில் இவ்வாறன இரட்டை வாழ்க்கையையே வாழ்கின்றோம். இதிலிருந்து விடுபடுவதற்கு இருக்கின்ற ஒரே வழி நமது பிரக்ஞையை மேன்மேலும் வளர்ப்பது மட்டுமே.
முடிவாக ராஜினி திரணகமவின் (Rajini Thiranagama) கூற்றை கூறுவது பொருத்தமானதாகும். தேசியவாதமானது ஆக்கிரமிப்பும் வன்முறையும் நிறைந்த தந்தையாதிக்க தேச உணர்வாக தொடர்ந்து இருக்குமாயின் பெண்களின் விடுதலை என்பது அவ்வாறன ஒரு தேசியவாத விடுதலைக்குள் இருக்கின்ற அவ்;வாறான கருத்தியலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவது என்பதே என்கின்றார் (Ismail). இதேபோல், பெண்கள் ஆணாதிக்கத்திற்கும் அதன் கருத்தியலுக்கும் அதன் தன்மைக்கும் எதிராக விமர்சிப்பார்களேயானால் இது தேசியளவில் “புதிய தேசம்” ஒன்றிக்கான புதிய வரைவிலக்கனத்தை உருவாக்க உதவும் என்கின்றார் என்லோவ் (Cynthia Enloe). ஆகவே இந்தக் கட்டுரையானது யாரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பதை நோக்கமாக கொண்டதல்ல. மாறாக நமது கடந்தகால சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் விமர்சனக் கண்ணோடு திரும்பிப்பார்ப்பதற்கும், எதிர்காலத்தை நோக்கி ஆரோக்கியமாகவும் முன்னேறிய கருத்துக்களுடன் செல்வதற்கும், நிகழ்காலத்தில் பிரக்ஞைபூர்வமாக செயற்படுவதற்குமான அக்கறையின்பாட்பட்டதே இக ;கட்டுரையின் நோக்கமாகும்.
மீராபாரதி
18.05.2011
Works Cited
Crenshaw, K. (2006). Mapping the margins: Intersectionality, identity politics, and violence
against women of colour. An Introduction of Women’s Studies: Gender in a Transnational World. Ed. Grewal, I and Kaplan. New York: McGraw-Hill Publishers, 2006 (SECOND EDITION). pp.200 – 206.
De Alwis, M. (2002). The Changing Role of Women in Sri Lankan Society. Social Research. 69
(3), 676 – 691.
Enloe, C. (2006). Nationalism and Masculinity. An Introduction of Women’s Studies:
Gender in a Transnational World. Ed. Grewal, I and Kaplan. New York: McGraw-Hill Publishers, 2006 (SECOND EDITION). pp. 222 -228.
Frankenberg, R. (1993). Introduction. Points of Origin, Points of Departure. White Women: Race
Matters. On the Social Construction of Whiteness. Minneapolis: University of Minnesota Press.pp.1-18.
Gowrinathan, N. (2010). Why Do Women Rebel? Understanding State Repression and Female
Participation in Sri Lanka. CSW Update Newsletter, Los Angeles. pp. 34 – 40.
Ismail, Q. (1992). ‘Boys Will Be Boys’: Gender and National Agency in Frantz Fanon and LTTE.
Economic and Political Weekly, 27(31/32), pp. 1677-1679.
King, C. (2006). Making Things Mean. An Introduction of Women’s Studies:
Gender in a Transnational World. Ed. Grewal, I and Kaplan. New York: McGraw-Hill Publishers, 2006 (SECOND EDITION). pp. 273 -275.
Lorde, A. (1984). Age, Race, Class, and Sex: Women Redefining Difference.
Mclintock, A. (1996). Imperial Leather: Race, Gender and Sexuality in the Colonial
Contest. Routledge. New York.
Nieves, G. (2006). Gender Inequality, the Desire for Political Self-Determination, And a
Longing for Revenge: Three Main Causes of Female Suicide Bombers. History. 496 (1).
Samath, F. (2010). How the War Gave Tamil Women More Space. Inter Press Services.
http://ipsnews.net/news.asp?idnews=51132.
Stack-O’Connor, A. (2007). Lions, Tigers, and Freedom Birds: How and Why the Liberation
Tigers of Tamil Eelam Employs Women. Terrorism and Political Violence. 19 (1), 43 –
63.
Yuval-Davis, N. (2006). Gender and Nation. An Introduction of Women’s Studies: Gender in a
Transnational World. Ed. Grewal, I and Kaplan. New York: McGraw-Hill Publishers,
2006 (SECOND EDITION). pp. 217 – 221.
Yuval-Davis, N. (1997). Women, Citizenship and Difference. Feminist Review, 57,
Citizenship: Pushing the Boundaries. (Autumn, 1997), pp. 4-27.
Geen opmerkingen:
Een reactie posten