தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக ஆவணப்படமொன்றை இலங்கை இராணுவம் தயாரிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று தெரிவித்துள்ளார்.
நந்திக்கடல் ஏரியில் இறுதிக்கட்ட யுத்தத்தை நேரில் கண்டவர்களின் சாட்சியங்களைக் கொண்டதாக இந்த விவரணப்படம் தயாரிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவில் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் இராணுவத் தளபதி கூறினார்.
எல்.ரி.ரி.ஈ. தலைவரின் மரணம் குறித்த விவரணப்படமெனர்றை சனல் 4 தயாரித்துள்ளதாகவும் அதை வெளியிடப்போவதாகவும் செய்திகள் உள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் உண்மையை உலகுக்கு காட்ட இராணுவம் விரும்புகிறது.
எனவே இறுதிப்போர் குறித்து முறையான, ஒத்திசைவான ஆதாரங்களின் அடிப்படையில் விவரணப்படமொன்றை நாம் தயாரிக்க ஆரம்பித்துள்ளோம்" என அவர் கூறினார்.
பிரபாகரனின் மரணம் குறித்த உண்மைத் தகவல்களை இப்படம் கொண்டிருக்கும். சம்பந்தப்பட்டவர்கள், அப்போது அங்கிருந்தவர்கள் இதற்கான நேர்காணப்படுவர்.
இதன் மூலம், நந்திக்கடலில் உண்மையில் என்ன நடந்தது என்பதை உலகம் அறிந்துகொள்ள வாய்ப்புகிட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten