ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 05 மார்ச் 2012, 12:34.42 AM GMT ]
குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை பலவீனப்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இணைய தளத்தில் இந்தியா வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் சர்வதேச கால மதிப்பீட்டின் போது, மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
மாறாக தனிப்பட்ட ரீதியில் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பொருத்தமாக அமையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten