ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டத்திட்டங்களை மீறி, தருஷ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமாறு, மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் தாக்கல் செய்ய உள்ள யோசனையை மனித உரிமை பேரவையின் உறுப்பினர்கள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள தருஷ்மன் குழுவினர், அமெரிக்காவின் யோசனை போதுமாதல்ல எனவும் போர் குற்றத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிய சுயாதீன விசாரணை நடத்தும் செயற்பாடுகளை பேரவை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
இந்த கோரிக்கை தொடர்பில் தருஷ்மன் குழுவினர் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளனர். மர்சுகி தருஷ்மன், ஸ்டீவன் ரட்னர், யஷ்மின் சூகா ஆகியோர் அனுப்பியுள்ள இந்த மகஜரில், வைத்தியசாலைகள் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மீது எந்த பொறுப்புமின்றி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.
இந்த விடயத்தில் இலங்கை தனது பொறுப்பை நிறைவேற்றுகிறதா இல்லை என்பதை விசாரணை செய்ய வேண்டியது சர்வதேசத்தின் பொறுப்பு எனவும் நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்கள் தமது மகஜரில் கூறியுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten