இலங்கையில் நடந்த போரில் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீல்கள் நடந்திருப்பது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சனல்4 என்ற ஊடகத்தில் வெளிவந்த புகைப்படங்களின் வாயிலாக இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
இப்போதும் கூட தமிழர்களின் மீது தாக்குதல்கள் நடந்து வருவதாக தெரிகிறது. போர் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய எந்தவொரு விதியையும், மனித உரிமையையும் கடைபிடிக்கவில்லை என்பது தெரியவந்தது.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து, இலங்கை அரசுக்கு பல்வேறு வகையான நிபந்தனைகளை முன் வைத்து 204 பரிந்துரைகள் கொண்ட தீர்மானத்தை அமெரிக்க அரசு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்ற அனைத்து நாடுகளின் ஆதரவைக் கோரி வாக்கெடுப்பு அடுத்த வாரம் நடக்கவுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க தீர்மானத்தில் உள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை இன்று ஐ.நா.வில் பதில் அளித்தது. 204 பரிந்துரைகளில் 113 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தது.
மேலும் வரும் செவ்வாய்கிழமை வரை தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
திருத்தப்பட்ட தீர்மானம் வரும் புதன் அல்லது வியாழக்கிழமையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உயர் பாதுகாப்பு வலயங்களை குறைக்க வேண்டுமென்றும் இலங்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மீதான பேச்சில் இந்தியா பேசுவதற்கு நேரம் இல்லாததால் இந்திய பிரதிநிதி பேச வாய்ப்பு கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக இலங்கை கூறியது.
மேலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் இலங்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
Geen opmerkingen:
Een reactie posten