vrijdag 15 maart 2013

இலங்கை கடற்படை சிறைபிடித்த 34 தமிழக மீனவர்களும் இன்று விடுதலை!


நேற்றையதினம் அதிகாலையில் கச்சதீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட தமீழக மீனவர்களில் எஞ்சியிருந்த 34 பேரும் இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
இது குறித்து தெரியவருவதாவது்
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 53 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கே வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனிடையே இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையின் இத்தகைய தொடர் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டில்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், 19 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 28-ம்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், மீனவர்கள் 34 பேர் இன்று ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது என்று எச்சரித்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.
விடுவிக்கப்பட்ட 34 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து தூதரக அதிகாரிகள் உதவியுடன் விரைவில் தமிழகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten