zaterdag 16 maart 2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு?


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக, டில்லியில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த காங்கிரஸ் உயர்மட்ட கூட்டத்தில், தீர்மானத்தை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இத்தாலி மாலுமிகள் பிரச்சினை மற்றும் இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் போன்றவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வதா.. வேண்டாமா என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதன்படி மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக எனினும் இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் திங்களன்று முறைப்படி அறிவிப்பார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten