maandag 18 maart 2013

புத்தரின் உருவத்தை பச்சை குத்தியமை தவறாகாது: பிரித்தானியா !


புத்தரின் உருவத்தை பச்சை குத்தி இருக்கின்றமை பௌத்த மதத்தை அவமதிப்பதாக அமையாது என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் புத்தர் உருவத்தை கையில் பச்சை குத்தி இருந்ததன் காரணமாக பிரித்தானியர் ஒருவர் நாடு கடத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு, இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையில் பௌத்த மதச் சின்னங்களை எடுத்துச் செல்வது, அதனை புகைப்படம் எடுப்பது போன்ற விடயங்களை பிரித்தானியா தமது பயண கட்டுப்பாட்டு அறிக்கையில் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten