தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

ஈழத் தமிழ் பெண் அபியை மணக்கும் மணிவண்ணன் மகன் ரகுவண்ணன்


ஈழத் தமிழ் பெண் அபியை மணக்கும் மணிவண்ணன் மகன் ரகுவண்ணன்தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மணிவண்ணின் மூத்த மகன் ரகுவண்ணன் “மாறன்” என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார்.


அதன்பின்பு சில படங்களில் நடித்தார். ஆனால் பெரிதாக பேசப்படவில்லை.
மகனை நடிகனாக்கியே தீருவது என்று முடிவு செய்த மணிவண்ணன், தான் தற்போது இயக்கி வரும் “நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ” என்ற படத்தில் ரகுவண்ணனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்.
அதோடு அடுத்து மகன் நாயகனாக நடிக்க “தாலாட்டு மச்சி தாலாட்டு” என்ற படத்தை இயக்கி தயாரிக்க இருக்கிறார்.
இதற்கிடையில் தன் மகனுக்கும் ஈழத்து தமிழ் பெண் அபிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
திருமண நிச்சயதார்த்தம் வடபழனியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திரைப்படத் துறையைச் சார்ந்த யாரும் கலந்து கொள்ளவில்லை. வருகிற யூன் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது.
ம.தி.மு.கவில் இருந்த மணிவண்ணன் தற்போது அதில் இருந்து விலகி சீமானின் நாம் தமிழர் இயக்கத்தில் இருக்கிறார்.
ஈழத்துக்கு ஆதரவான போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். தன் இரு மகன்களுக்கும் ஈழத் தமிழ் பெண்களைத்தான் திருமணம் செய்து வைப்பேன் என்று மேடைகளில் பேசி வந்தார்.
தற்போது தன் முதல் மகனுக்கு ஈழத் தமிழ் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்

Geen opmerkingen:

Een reactie posten