தமிழகத்தில் இன்று மீண்டும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதேவேளை டெல்லியில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்த இலங்கையை சேர்ந்த புத்த பிட்சுயை தமிழீழ ஆதரவாளர்கள் ஓட, ஓட விரட்டியடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கை கண்டியை சேர்ந்த புத்த பிட்சு உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். புத்தகயா, வாரணாசி, லும்பினி ஆகிய இடங்களுக்கு சென்று விட்டு டெல்லி வந்த அவர்கள், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்கள். அப்போது, தகவல் அறிந்த தமிழீழ ஆதரவாளர்கள் 2 பேர் அங்கு வந்துள்ளனர். ரயிலுக்குள் சென்ற அவர்கள், அங்கிருந்த புத்த பிட்சுவை சரமாரியாக தாக்கினர். இதில் நிலை குலைந்து போன புத்தபிட்சு, கீழே இறங்கி ஓடினர்.
அவரை விடாமல் துரத்திய அவர்கள், ஓட, ஓட விரட்டியடித்தனர். அப்போது, அங்கிருந்த பயணிகள் தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழீழ ஆதரவாளர்கள் ஒருவர், "அங்கே கொன்னுட்டு இங்கே வாறிங்களடா நாய்களா, எல்லாரும் உங்க ஊருக்கு திரும்பி போங்கடா" என்று ஆவேசமாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த புத்த பிட்சு உடனடியாக தனது காவி உடையை மாற்றி சாதாரண உடைக்கு மாறினார். இது இவ்வாறு இருக்க ஏனைய புத்த பிக்குகள் அவசரமாக விமான நிலையம் செல்ல முற்பட்டுள்ளார்கள். சென்னை விமானநிலையத்தையும் மாணவர்கள் விட்டுவைக்கவில்லை. அங்கே கூடிய நூற்றுக்கணக்கான மாணவர்களால் பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது. ஆயிரக்கணக்காண பொலிசார் அங்கே குவிக்கப்பட்டுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. இதே நேரம் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தையும் மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளார்கள்.
அடுக்கடுக்காக ஆளுனர் மாளிகை இலங்கைத் தூதரகம் என்று சகல இடங்களையும் மாணவர்கள் முற்றுகையிட ஆரம்பித்ததால் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சுமார் 1000 த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை கைதாகியிருக்கிறார்கள் என்று மேலும் அறியப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten