woensdag 13 maart 2013

இலங்கையில் பிரமாண்டமான அளவில் விமான அலுவலகம் கட்டுகிறார் கருணாநிதியின் பேரன்?


இலங்கையில் மிகப் பிரமாண்டமான அளவில் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன், தயாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலம் கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இலங்கையில் இறுதிகட்டப் போரின் போது தமிழர்கள் மீது அந்நாட்டு இராணுவம் கொத்துக் குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசியது.
போர் நடந்தபோது இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் உரையாற்றியிருந்தார்.
அதில், இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டார். அவரது உரைக்கு அனைத்து திமுக உறுப்பினர்களும் கை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
ஆனால் போருக்கு பின்பு தயாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வாரம் 4 முறை ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து நடைபெறுகின்றதாம்.
சிங்கள வியாபாரிகள் தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு வந்து போக ஸ்பைஸ்ஜெட் விமானம் தங்களுக்கு ஏதுவாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்களாம்.
ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலகம் செயல்பட கொழும்பில் பிரமாண்டமான கட்டிடம் கட்டிக் கொண்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten