donderdag 14 maart 2013

அடுத்த தாக்குதலுக்கு தயாராகிறது ஆழ ஊடுருவும் படையணி?


விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்ததாக சிறீலங்கா அரசாங்கம் கூறிவருகின்றது. ஆயினும் தனது இராணு கட்டமைப்புக்களை அதிக கவனத்துடன் பலப்படுத்தி வருகிறது.
இந்த அடிப்படையில், யாருமே எதிர்பாராத வகையில் தமது பலமிக்க படையணியான ஆழ ஊடுருவும் படையணிக்கு விசேட பயிற்சிகளை வழங்கி அடுத்த கட்ட தாக்குதல் நடவடிக்கைக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
இரு அதிகாரிகள் உட்பட 76 சிறப்புப் படையினர் குடாஓயா முகாமில் இந்த பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.
பெரும் காடுகள் ஊடாக விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல்களை நடாத்தக்கூடும் என்ற வதந்திகள் பரவும் சூழலில் இந்த செய்திகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
comma600_3

longrp

Geen opmerkingen:

Een reactie posten