maandag 18 maart 2013

யாழில் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிரான சுவரொட்டிகள்! மோட்டர் சைக்கிள் நபர்களினால் அகற்றப்பட்டது!


யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் இன்று திங்கள் கிழமை கிழித்து எறியப்பட்டுள்ளது.
யாழில் இந்த சுவரொட்டிகள் நேற்று முன்தினம் இரவு முதல் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளுக்கு “மக்கள் முன்னணி” என உரிமை கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே இனம் தெரியாத நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்து விட்டு தலைமறைவாகியுள்ளனர்.
இந்த சுவரொட்டிகள் யாழ். நகரிலுள்ள பஸ் நிலையத்திலும்,  பருத்தித்துறை வீதி, யாழ். வேம்படி வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி போன்ற பல இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுடிருந்தன.
ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றையே அவர்கள் கிறித்தெறிந்தனர்.
இந்த சுவரொட்டியில் பொறிக்கப்பட்ட வாசகங்களாவது “எங்கள் வீட்டுப் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம”;, “அமெரிக்காவே வாயை மூடு” மற்றும் “எங்கள் தானைத் தலைவர் மகிந்த ராஜபக்சவே” ஆகிய வாசகங்கள் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
யாழில் கிழித்து எறியப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள சுவர்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றமை காணக்கூடியதாக இருக்கிறது.

Geen opmerkingen:

Een reactie posten