தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா எங்கும் மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்காக உணர்வெழுச்சியுடன் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தைக் கண்டு மத்திய அரசு, மற்றும் அதன் உளவுத்துறை என்பன மூக்கின் மேல் விரலை வைத்து மிரண்டு போய் யோசித்துக் கொண்டு இருக்கின்றனர்.
காவல்துறை மாணவர்களை தாக்குவதாக செய்திகள் வெளிவருகின்றது. எந்த காரணத்தைக் கொண்டும் திருப்பி அடித்து விடாதீர்கள். இது உங்கள் உண்ணா நோன்பை சீர்குலைக்க நடக்கும் ஒரு சூழச்சி… கவனமாக இருங்கள்…
BBC, Channel 4, IBC, IBC Asia இன்னும் பல மீடியாக்கள் இப்பபோது தான் உங்கள் பக்கம் திசை திரும்பி உள்ளது…
இந்திய உளவுதுறை இஸ்ரேலிய உளவுத்துறையுடன் இந்த மாணவர்களின் போராட்டத்தை நசுக்க ஆலோசனை மற்றும் வியூகம் வகுத்துக் கொண்டிருப்பதாக ஒரு செய்தியும் லண்டனில் கசிந்துள்ளது…
கவனம் மாணவர்களே… தமிழ் நாட்டில் நடக்கும் மாணவ போராட்டங்களை அண்டைய மாநிலங்களுக்கும் பரப்புங்கள், மாணவர்கள் மேல் கை வைத்தால் எந்த மாநில மாணவனும் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டான்….
காவல்துறை மாணவர்களை அடித்த செய்தி அறிந்த மலேசிய மாணவர்கள் கொந்தளித்துள்ளனர்…
இந்த மாணவ போராட்டம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விட்டது…
பிள்ளையார் சுழி போட்ட லயோலா கல்லுரி மாணவர்களுக்கு நன்றி…… மாணவர் சக்க்தியே மாபெரும் சக்தி.
-லண்டனில் இருந்து கணேஷ்-
Geen opmerkingen:
Een reactie posten