இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை அடையாரில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மின்சார விளக்குகள், மின்விசிறிகள் கூட இல்லாது, கடும் நுளம்புக் கடிகளுக்கு நடுவே, உண்ணாநோன்பு இருக்கும் 8 மாணவர்களும், 1 மாணவியும், ஏராளமான தமிழ் உணர்வாளர்களும் இரவைக் கழித்து வருகின்றனர்.
உண்ணாவிரதம் இருக்கும் அந்த மாணவி தமிழ்ப் பெண் அல்ல என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்கது.
அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்குப் பெண்ணான அவர் உண்ணாவிரதம் இருப்பதில் உறுதியாக இருக்கிறார்.
விடுதிக்கு சென்று தங்குமாறு கேட்டுக் கொண்டதையும் மறுத்து உண்ணாவிரத பந்தலிலேயே இருந்து வருகிறார்.
http://www.tamilwin.net/show-RUmryDSXNYhw3.html
|
Geen opmerkingen:
Een reactie posten