அக்கரைப்பத்தனை, ரொரின்டன், மோசன் வனப் பகுதியில் புதையல் அகழ்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. மோசன் வனப் பகுதியில் தேயிலை பயிர்ச் செய்கை இடம்பெற்ற போதும் தேயிலை வளர்ச்சி போதாமையின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவ்வனப் பகுதியில் கற்குகைகளிலான சிறிய கோயில்கள் அமைந்துள்ளன. கோயில்கள் அமைந்துள்ள இடப்பகுதியில் புதையல் அகழ்வதற்காக, கற்பாறைகளை உடைப்பதற்கு வெடி மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் நேற்று முந்தினம் (12) காலை விறகு வெட்டுவதற்காகச் சென்ற மக்கள் வெடி மருந்து வைக்கப்பட்டுள்ளதை அறிந்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன்பின்னதாக வெடிமருந்துகள் அகற்றப்பட்டுள்ளன
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4691
Geen opmerkingen:
Een reactie posten