அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எதனையும் அமுலாக்கவில்லை. இந்தநிலையிலேயே, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் அரசாங்கத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருந்த பிரேரணையில் இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
எனினும் அரசாங்கம் அதனை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த நிலையிலேயே இந்த வருடம் ஜெனீவாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்தியா வலியுறுத்தி வருகின்ற நிலையிலும் அதற்கு இலங்கை அரசாங்கம் பின்னிற்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten