தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

அரசாங்கம் மக்களுக்கு கொடுப்பதை விட பிடுங்கியதே அதிகம்!- ஆய்வுத் தகவல் !


இலங்கை அரசாங்கம் வறிய மக்களுக்கு வழங்கியதை விட, அவர்களிடம் இருந்து பிடிங்கிய செயற்பாடுகளே அதிகம் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான வேர்டி ரிசேர்ச் பிரைவிட் லிமிடட் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த வருடம் அரசாங்க வறிய மக்களுக்கான பல்வேறு கொடுப்பனவுகள் அதிகரித்திருந்தது. எனினும் இதற்கு பதிலாக தன்னிச்சையாக அரசாங்கம் அவர்களிடம் இருந்தே நிதியை மீள்வசூலிப்பதற்கான வேலைத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வெளிநாட்டு வர்த்தக கடன்கள் மற்றும் தனியார் தொழில் முதலீடுகள் தொடர்பில் மாத்திரமே அரசாங்க திட்டத்தில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten