donderdag 14 maart 2013

Lankan Navy arrested 63 TN fishermen!!!


தமிழக மீனவர்கள் 63 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! விசாரணையின் பின்னர் 20 போ் விடுவிப்பு
தமிழ்நாடு,  இராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் 19 பேரை இலங்கைக் கடற்படையினர் நேற்றிரவு சிறைபிடித்து சென்ற நிலையில், இன்றும் 45க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமேஸ்வரத்தை சேர்ந்த நேற்று பிற்பகலில் கச்சதீவு அருகே மீன்பிடித்ததாகக் கூறி, 4 விசைப்படகுகளையும், 19 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர்.
மீனவர்கள் அனைவரையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு, அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இராமேஸ்வரம் மீனவர்கள் 652 விசைப்படகுகளில் தனுஷ்கோடி-கச்சத்தீவு இடையே மீன்பிடித்து விட்டு, இன்று அதிகாலையில் கரை திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஆதாம்பாலம் அருகே வந்த போது, 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும், அதில் இருந்த 45 க்கும் மேற்பட்டுள்ள மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் வழிமறித்து, சிறைப்பிடித்துச் சென்றனர்.
பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக மீனவர்களை கண்டித்து இலங்கை மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை காட்டுவதற்காகவே இந்த நடவடிக்கையை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிகின்றன.
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் நேற்றுத் தான் சொந்த ஊர் திரும்பினர். இந்த நிலையில் 63 க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
கடந்த 2 வாரங்களில் தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் பிடித்துச் செல்வது இது 3 வது முறையாகும்.
2ம் இணைப்பு
இராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் விடுவித்தது இலங்கை
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களில் 20 பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். 30 மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இராமேஸ்வரம் மீனவர்கள் 652 விசைப்படகுகளில் தனுஷ்கோடி-கச்சத்தீவு இடையே மீன்பிடித்து விட்டு, இன்று அதிகாலையில் கரை திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஆதாம்பாலம் அருகே வந்த போது, 11 விசைப்படகுகளையும் அதில் இருந்த மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய பி்ன்னர் 20 மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்துள்ளது. எஞ்சிய 30 மீனவர்களை நெடுந்தீவில் வைத்து இலங்கை கடற்படை விசாரித்து வருகிறது.
3ம் இணைப்பு
கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேருக்கு 28-ம் தேதி வரை சிறைக்காவல்
இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் நேற்று அதிகாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். பின்னர் அவர்கள் தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர்கள் 19 பேரையும் 28-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இன்று அதிகாலை மேலும் 53 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். அவர்களில் 30 பேர் இன்று மாலையில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மற்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Lankan Navy arrested 63 TN fishermen
[ Thursday, 14 March 2013, 12:49.37 PM GMT +05:30 ]
Sri Lanka Navy intercepted five fishing trawlers carrying 34 Indian fishermen while poaching in the Delft Island seas this morning.
They were brought to the Delft anchorage by the Northern Naval Command. In another separate incident Navy arrested 19 Indian fishermen along with four trawlers when they were fishing in the seas off Talaimannar.
All these arrested fishermen were investigated at the Talaimannar naval base.
Lankan Navl personals attacked Rameshwaram fishermen while returning from the Danushkodi- Katachatheevu sea this early morning at the Adams bridge.
Sri Lanka Navy said it continued to conduct routine patrols to protect Lankan waters from poachers who also damaged fisheries resources as well.
16 Tuticorin fishermen arrested by the Lankan Navy returned to their villages yesterday. Within the past two week Lankan navy arrested 63 Indian fishermen, sources said.
http://eng.lankasri.com/view.php?22eOld0acJ5YOd4e2UMC302cAmB3ddeZBmU203eWAA2e4oY5naca3lO442

Geen opmerkingen:

Een reactie posten