தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

Southern fisherman step out from Wadamarachchie and informs navy


வடமராட்சி கிழக்கிலிருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறி கடற்படையினரிடம் முறையீடு
யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் எதிர்ப்பை அடுத்து அங்கு தங்கியிருந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வந்திருந்த நூற்றுக்கணக்கான தென்பகுதி கடற்றொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியிருப்பதாகத் தெரியவருகின்றது.
தென்பகுதியில் இருந்து வந்து வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்களுடன் இணைந்து கடல் அட்டை, சங்கு, கணவாய், சிங்க இறால் போன்றவற்றை நவீன முறைகளைப் பயன்படுத்திப் பிடிப்பதற்காக இந்த தென் பகுதிக் கடற்தொழிலாளர்கள் திட்டமிட்டு அங்கு தங்கியிருந்துள்ளனர்.
இதனை அடுத்து வடமராட்சி கிழக்குக் கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தினர் அவ்வாறு வந்திருக்கும் தென்பகுதி கடற்றொழிலாளர்களை அங்கிருந்து தொழில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த புதன்கிழமை தீர்மானமொன்றை நிறை வேற்றியிருந்தனர்.
இந்த தீர்மானத்தை அடுத்து அங்கு தொழில் நடவடிக்கைகளுக்காக வந்திருந்த இந்த தென்பகுதி கடற்றொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இவ்வாறு தென்பகுதி மீனவர்களின் தொழில் நடவடிக்கையினால் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் கரைவலை மற்றும் சிறுதொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தத் தொழில் நடவடிக்கைக்கு வடமராட்சிப் பகுதி கடற்றொழிலாளர்கள் சிலர் தென்பகுதித் தொழிலாளர்களுக்குப் படகு மற்றும் இயந்திரம் அத்துடன் தங்குவதற்கு இடத்தையும் வழங்கியிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளியேறிச்சென்ற தென்பகுதி கடற்தொழிலாளர்கள் அங்குள்ள கடற்படையினரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர்களை மீண்டும் கடற்றொழிலில் ஈடுபட கடற்படை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகின்றது.
“கடல் வளத்தைப் பாதுகாப்போம்”- யாழ்.கடற்றொழிலாளர்களுக்கு அமெரிக்கா பயிற்சி
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு யூஎஸ் எயிட் நிறுவனம் “கடல் வளத்தைப் பாதுகாப்போம்” என்ற தொனிப் பொருளில் விசேட பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை இன்று வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் வைத்து வழங்கியுள்ளது.
யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து கடற்றொழில் சமாசங்களிலிருந்து சுமார் 79 பேர் இந்த கடல்வள விசேட பயிற்சியைப் பெற்றுள்ளனர். ஆழ்கடலில் நீந்தல் பயிற்சி, இயந்திரங்கள் நடுக்கடலில் பழுதடைந்தால் எடுக்க வேண்டிய அவசரத் தேவை நிலைகள், மீன்பதனிடுதல் போன்ற பயிற்சிகளை வழங்கியுள்ளது.
இந்த பயிற்சி பெற்ற கடற்றொழிலாளர்களுக்கான சான்றிதழை எயிட் நிறுவன வதிவிடப் பிரதிநிதி டொன் கிளைம் வழங்கி கௌரவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத் தலைவர் எமிலியாம் பிள்ளை, யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://news.lankasri.com/show-RUmryDSYNYgp7.html

Southern fisherman step out from Wadamarachchie and informs navy
[ Thursday, 14 March 2013, 10:02.18 AM GMT +05:30 ]
Due to the arrival of southern fishermen northern fishermen face various difficulties to engage in fishing. 
Group of Wadamarachchie fishermen have provided boats and accommodation facilities for fishermen arrive from the Southern Province.
Southern fishermen have informed naval personals on this issue. Navy currently taking steps to provide better security for fishermen arrive from the southern province.
“Protecting Marine Resources” US train Lankan fishermen USAID organization special work shop on “Protecting Marine Resources” in SriLanka and handed over certificates for participants.
79 members from various fisheries organizations in the Jaffna district took part in this work shop. They received training on swimming in the deep sea, mechanical training and also how to maintain the quality of the fish.
Special envoy of the USAID Done Dlim handed over certificates to participants.
Northern Province Cooperatives leader of the fisheries union Emiliyam Pillay and the director of the Jaffna district fisheries department Ganesamoorthu was also present at this event.

http://eng.lankasri.com/view.php?22eOld0acV5YOd4e2UMC302cAmB2ddeZBmU203eWAA2e4oY5naca3lO442

Geen opmerkingen:

Een reactie posten