donderdag 4 april 2013

மாற்றுக் கருத்துக்களை வெளியிட சுதந்திரமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது – கரு ஜயசூரிய


மாற்றுக் கருத்துக்களை வெளிட சுதந்திரமில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
இந்தத் தாக்குதலின் மூலம் வடக்கு மக்களின் மாற்றுக் கொள்கைகளை வகிக்கும் உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உணர்கின்றேன்.
வடக்கு மக்கள் மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் உரிமைக்கு மீளவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இனந்தெரியாத ஆயுததாரிகள் எதிரிகளைத் தாக்கி எவ்வித பாதிப்பும் இன்றி தப்பிச் செல்லக் கூடிய சூழ்நிலை நாட்டில் காணப்படுகின்றது.
மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றோமோ இல்லையோ அவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டுமென கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten