சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் அமீர்..
இனம் சார்ந்த, மொழி சார்ந்த பொது பிரச்சினைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இலங்கை ஜனாதிபதியை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ம் திகதி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
அன்றைய தினம் அனைத்து இயக்குநர்களும் படப்பிடிப்பை இரத்து செய்துவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ் திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள் இலங்கையுடன் இணைந்து செயல்படுவதற்கு எதிராக உறுதியான முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
Geen opmerkingen:
Een reactie posten