குறித்த துறையின் விசேட நிபுணரான பிராங்க் லாரு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கை தொடர்பான யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலேயே பிராங்க்கின் இலங்கை பயணத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமையால் பிராங்கின் பயணக்கோரிக்கை வலுவற்றதாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவுக்கான வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த விசேட நிபுணரின் இலங்கை பயணம் தொடர்பில் புதிய அனுமதி பெறப்பட வேண்டும் என்று ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten