dinsdag 12 maart 2013

இராணியின் இராப்போசன விருந்தில் சனல் 4 நிருபர் சர்ச்சை !


நேற்றையதினம் காமன்வெலத் நாடுகளின் புதிய சாசனம் ஒன்றை மகாராணியார் வெளியிட்டுவைத்தார். அதன் பின்னர் விருந்தும் தேவாலயப் பூசையும் நடைபெற்றது. சுமார் 54 நாடுகளின் தூதுவர்களும் இதில் கலந்துகொண்டார்கள். முன்னதாக விருந்தில் கலந்துகொள்ள காமன்வெலத் நாடுகளின் தலைவர் கமலேஷ் சர்மா அவர்கள் , விடுதிக்குச் சென்றார். அவரை வாசலில் வைத்து வழிமறித்த சனல் 4 இன் நிருபர், இலங்கைக்கு மகாராணியார் செல்லவேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு எவ்வித பதிலையும் வழங்காது கமலேஷ் சர்மா அவர்கள் சென்றுவிட்டார். பின்னர் இலங்கைத் தூதுவரை வழிமறித்த சனல் 4 இன் நிருபர், இலங்கையில் காமன்வெலத் நாடுகளின் கூட்டம் நடைபெறவேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இலங்கையில் மனித உரிமை மேம்பட்டுள்ளதா ? சுயாதீன விசாரணைகள் நடைபெற்றுள்ளதா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு சர்சையைக் கிளப்பினார் சனல் 4 இன் நிருபர். முதலில் கேள்விகளுக்கு பதில் தர மறுத்த இலங்கைத் தூதுவர் பின்னர் ஒரு சில வார்த்தைகளைக் கூறி நழுவிட்டார். இன் நிகழ்வை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது(காணொளி இணைப்பு) 



Geen opmerkingen:

Een reactie posten