தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

தமிழக அரசியல்வாதிகளின் கைகளில் இருந்து ஈழப்போராட்டம் நகர்வு !


இதுவரை காலமும் தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்கள் ஈழப் போராட்டத்துக்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்கள். தற்போதும் செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும் தமிழக மாணவர்கள் மத்தியில் ஈழம் தொடர்பான விழிப்புணர்வு ஒன்று தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதுவரைகாலமும் அமைதிகாத்து வந்த தமிழக மாணவர்கள் பலர் ஈழ ஆதரவுப் போராட்டங்களில் இறங்கியுள்ளார்கள். கடந்த சில தினங்களாக லயோலாக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார்கள். இவர்களை பொலிசாட் கைதுசெய்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள். 

ஆனால் இது இவ்வாறு இருக்க நேற்றைய தினம்(11) திருச்சியிலும் மாணவர்களின் போராட்டங்கள் வெடித்துள்ளது. இதற்கு தமிழீழ மாணவர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றுள்ளது. ஈழத்தில் இருக்கும் அனைத்து பல்கலைக் கழக மாணவர் சமூகத்தினரும் தமது ஆதரவை தமிழக மாணவர்களுக்குத் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம். தமிழகத்தில் போராடிவரும் மாணவர்கள், அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் வெறும் கண்துடைப்பு நாடகமே என்றும் தெரிவித்துவருகின்றனர்.

தமிழக மாணவர்கள் ராஜபக்ஷவின் உருவ பொம்மையை எரித்தவேளை அதனை அணைக்க பொலிசார் பாடுபடும் காட்சி !




Geen opmerkingen:

Een reactie posten