dinsdag 19 maart 2013

மாணவர் எழுச்சி போராட்டம்: தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழ்கின்றது: பேராசிரியர் மணிவண்ணன்


ஈழத் தமிழர் விவகாரத்தினை மையப்படுத்தி தமிழகத்தில் தோற்றம் பெற்றுள்ள மாணவர் எழுச்சியானது தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்தி வருவதாக தமிழகத்தில் இருந்து ஜெனீவா சென்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா வள அறிஞர் குழுப்பிரதிநிதி பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
1960களின் பின்னர் இந்திய மத்திய அரசினை நோக்கியதாக தற்போது தோற்றம் பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறவழிப்போராட்டம் கவனத்தினைப் பெற்றதாக அமைகின்றதென தெரிவித்துள்ள போராசிரியர் மணிவண்ணன் அவர்கள் சிறிலங்கா தொடர்பில் பன்னாட்டு விசாரணையினை வலியுறுத்துவதும் மற்றும் பொதுசன வாக்கெடுப்பினை வலியுறுத்தி வருவரும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தினை தமிழகத்தில் ஏற்றபடுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten