கொழும்பு வெலிக்கடைச் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கைதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதியொருவர் தமக்கு விடுதலை அல்லது மரண தண்டனையை துரிதமாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தி சிறைச்சாலையின் கூரை மீதேறி தமது போராட்டத்தை ஆரம்பித்தார்.
அதன்பின்னர், மேலும் இரண்டு மரண தண்டனை கைதிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கைதி ஒருவரின் உடல் நிலை மோசமானதையடுத்தே, அவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிறைக்கைதிகள் மூவரும் தங்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten