நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள தேசிய செயல்பாட்டு திட்டத்தில் உள்ளடக்கப்படாத பரிந்துரைகளையும் எதிர்காலத்தில் அமுலாக்க வேண்டும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
நேற்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய ஜப்பானிய தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை ஜப்பான் வரவேற்கிறது.
எனினும் இதில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிட்ட சில பரிந்துரைகள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஏனைய பரிந்துரைகளையும் அமுலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்த வேளையில் ஜப்பான தூதுவர் நேற்று ஜெனிவா மாநாட்டில் இவ்வாறு உரையாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten