அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர்.
மனித உரிமைப் பேரவையின் 19ம் இலக்க அறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
36 அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஜெனீவா சென்றுள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நவநீதம்பிள்ளை வாக்குறுதியளித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten