donderdag 14 maart 2013

முரளிதரனின் முகத்திரை கிழிகிறது:விழித்தெழுங்கள் ஈழத்தமிழர்களே!


முரளிதரனின் முகத்திரை கிழிகிறது:விழித்தெழுங்கள் ஈழத்தமிழர்களே!

தன்னை ஒரு தமிழன் என கூறுவதை தவிர்த்து சிறீலங்கன் எனறே அடையாளப்படுத்தி வந்தார் முத்தையா முரளிதரன். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சிறீலங்கா அரசின் இன அழிப்பிலிருந்து தப்பிப்பதற்காக அவுஸ்ரேலியாவுக்கு தமிழ்மக்களை தடுத்து நிறுத்தும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
தற்போது இவரின் சகோதரர் சட்டவிரோத ஸ்பிரிட் இறக்குமதியில் ஈடுபட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது,
துபான உற்பத்திக்காக சட்ட விரோதமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்பிரிட் தொகையொன்றை கொழும்புத் துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அரசாங்கத்திலுள்ள முக்கியஸ்தர்கள் சிலரின் ஆதரவுடன் இந்த ஸ்பிரிட் வகைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்இ இவை இலங்கை தேசியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் சகோதரர் சசிதரனின் பெயரில் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திலுள்ள முக்கியஸ்தர் ஒருவருக்குச் சொந்தமான நிறப் பூச்சு உற்பத்திக்கு என்ற பெயரில் இந்த ஸ்பிரிட் தொகை தருவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஜயலத் பீரிஸ் என்பவருக்கே இந்த ஸ்பிரிட் தொகை விநியோகிக்கப்படவிருந்ததாகக் கூறப்படுகின்ற போதிலும்இ அவருக்கும் நிறப் பூச்சு தொழில்துறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஸ்பிரிட் தொகையை உடனடியாக விடுவித்து விசாரணைகளை கைவிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும்இ ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்‌ஷ, சுங்கப் பிரிவு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
அத்துடன் இதுகுறித்து தமக்கு விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சின் செயலாளரும்இ திறைசேரியின் செயலாளருமான பி.பீ. ஜயசுதந்திர சுங்கப் பிரிவுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் வசந்த பெரேராஇ அமைச்சர் மேர்வின் சில்வா, அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ஊவா மாகாண முதலமைச்சர் சச்சிந்திர ராஜபக்‌ஷவின் மனைவி ஆகியோர் நிறப்பூச்சு உற்பத்திக்கு எனக் கூறி, மதுபான உற்பத்திக்காக நாளாந்தம் ஸ்பிரிட் வகைகளை பெருந்தொகையில் நாட்டுக்கு தருவிப்பதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட அதிகாரிகள் சிலர் அண்மையில் பதவி நீக்கப்பட்டிருந்ததாகவும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten