donderdag 14 maart 2013

போர்க்களமாக மாறும் ஐ.நா மனித உரிமை பேரவை வளாகம்!


போர்க்களமாக மாறும் ஐ.நா மனித உரிமை பேரவை வளாகம்!

சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து, ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை வளாகத்தில் நேற்று அமெரிக்காவும் சிறிலங்காவும் ஏட்டிக்குப் போட்டியான கூட்டங்களை நடத்தியுள்ளன.
ஆசிய குழுவின் சார்பில் ஜோர்தான் ஒழுங்கு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அமைச்சர் மஹிந்த சமரசிங்க, போருக்குப் பிந்திய விவகாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்னொரு அறையில், அமெரிக்கா ஒழுங்கு செய்த கூட்டத்தில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்து ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எலீன் சேம்பர்லைன் தலைமையிலான அமெரிக்க குழுவினர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானம் குறித்து உறுப்பு நாடுகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.
அதேவேளை அமெரிக்கத் தீர்மானம் குறித்த முறைப்படியான பதிலை சிறிலங்கா அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அறிவிக்கவுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா செயற்படும் என தாம் இன்னும் நம்புவதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.
குறித்த தீர்மானத்தின் இறுதி ஆவணம் சமர்ப்பிக்கப்படும் போது, கடைசி நிமிடத்தில் இந்தியா முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.


ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி சட்டத்தரணிகள் உண்ணாவிரதம்: நீதிமன்றத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

http://asrilanka.com/2013/03/14/15779


ஜனாதிபதி மஹிந்தவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் – காடுவெட்டி குரு

ஜனாதிபதி மஹிந்தவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் – காடுவெட்டி குரு
கரூரில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேபட்டியில் கூறியதாவது:-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக அறிவித்து அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றவேண்டும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த சூழ்நிலையிலும் பா.ம.க. கூட்டணி வைத்துக் கொள்ளாது.
பா.ம.க. தலைவர் ராமதாஸ் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல கலெக்டர்கள்தான் தடை விதித்துள்ளனர். தமிழக அரசு தடை விதிக்கவில்லை.
மத்திய அரசும், தி.மு.க.வும் நினைத்திருந்தால் இலங்கையில் தனி ஈழம் பெற்றுத்தந்திருக்க முடியும். அங்கு தமிழினம் அழிந்த பிறகு அவர்களை வாழவைப்பதாக தி.மு.க.வும், காங்கிரசும் கூறி மக்களை ஏமாற்றுகின்றன.
டெசோ செயல்பாடு என்பது வெறும் கண் துடைப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten