donderdag 14 maart 2013

வடக்கில் காணி பிரச்சினைக​ளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்: ஜனாதிபதியின் ஆலோசகர் ரஜீவ


வடக்கில் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நல்லூர் பிரதேச செயலகத்தில் “முரண்பாடுகளை தீர்த்தல்” என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின்போதே இதனை அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இங்குள்ள காணி தொடர்பான பிரச்சினையை நான் நன்கு அறிவேன். அதனைத் தீர்ப்பற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் வரையறையை கூற முடியாது.
பொது மக்களிடம் காணப்படுகின்ற காணி தொடர்பான பிரச்சினைளுக்கு காணி தொடர்பான மக்கள் சபை ஒன்றை நிறுவி, பட்டதாரி பயிலுனர்கள் அந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து, பிரதேச செயலகத்திற்கு அறிக்கையிடுவதன் மூலம் அவற்றைத் தீர்த்து வைக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் பிரதேச சபைகள் தங்கள் பகுதிக்குட்பட்ட வீதிகளை புனரமைக்கும் போது அதன் மூலப்பொருட்களை தாங்களே கொள்வனவு செய்து திருத்த வேலைகளுக்கான கூலிகளாக இராணுவத்தினரையும் பொலிஸாரையும் பொதுமக்களையும் பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தும் போது கூலிக்குரிய செலவீனம் குறையும் போது நீண்ட தூரமான வீதியை புனரமைக்க முடியும்.
அரச செயலகங்களில் சிறுவர் விடயங்களைக் கையளும் உத்தியோகஸ்தர்கள் சிறுவர்கள் பெண்கள் தொடர்பான விடயங்களில் கூடிய கவனம் செலுத்துவதோடு மக்கள் மத்தியில் இறங்கி செயலாற்ற வேண்டும்.
பாடசாலைகளில் மாணவர்களுக்கு கல்வியை மட்டும் கொடுக்காமல் ஏனைய கலை கலாசார செயற்பாடுகளிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten