ஈழத்தையும் அதன் மனிதர்களையும் மையப்படுத்தி தன் அடுத்த படைப்பை உருவாக்க கவிஞர் வைரமுத்து இலங்கைக்குக் செல்லவுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் படைப்பான மூன்றாவது உலகப் போர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாவலுக்கு இலக்கியச் சிந்தனை விருதும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், தமிழ் ஈழம் தொடர்பான ஒரு நாவலை அடுத்து படைப்பாக அவர் எழுதவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே அதை தமிழகத்திலிருந்து எழுதாமல், இலங்கைக்கே போய் சில காலம் தங்கியிருந்து அந்த மண்ணையும் மனிதர்களையும் பார்த்து, பேசி, வாழ்ந்து எழுதப் போகிறாராம்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தெரிவிக்கையில்,
எனது அடுத்த படைப்பு ஈழகாவியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான களப் பணிகள் மிகப் பெரியவை என்பதால் இலங்கைக்கே சென்று சில காலம் இருக்க ஆசைப்படுகிறேன்.
அந்த மண்ணையும், காற்றையும் நிலத்தையும், நீரையும் மனிதர்களையும் தொட்டு உணராமல் படைத்தால், அது முழுமையான படைப்பாக இருக்காதே? என்றார்.
http://www.tamilwin.net/show-RUmryDSYNYgq1.html
Geen opmerkingen:
Een reactie posten