தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

அமெரிக்க தீர்மானத்தை அதிரடியாக எரித்த மாணவர்கள் !



இலங்கைக்கு எதிராக ஐ நா வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை தமிழர்கள் திட்டவட்டமாக எதிர்க்க வேண்டும் என்று இப்போது மாணவர்கள் தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிலர் இந்தியா அமெரிக்கா தீர்மானத்தை ஆதரிக்கிறது அதனால் அதை ஆதரிப்பது தான் தமிழர்களுக்கு நல்லது என்று கூறி வருகின்றனர். உண்மையில் அமெரிக்காவின் தீர்மானத்தை நாம் ஆதரித்தால் அது தமிழர்களுக்கு பெரும் தீங்காகத் தான் முடியும் . காரணம் அந்த தீர்மானத்தில் சர்வதேச இனப்படுகொலைக்கான விசாரணை என்று ஒன்று இல்லவே இல்லை. இலங்கையே தான் செய்த குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்லித் தான் அமெரிக்காவும் இந்தியாவும் இந்த தீர்மானத்தை கொண்டு வருகின்றன.

அதிலும் சர்வதேச அரசியல் தரகரான சுப்பிரமணிய சுவாமியின் தலையீடு இருக்கிறது என்று நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சுப்ரமணிய சுவாமியே தான் இலங்கைக்கு ஆதரவாக பேசத் தான் அமெரிக்கா வந்துள்ளதாக
ஒப்புக் கொண்டார். இவரை போன்றவர்கள் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை திருத்தி உள்ளனர். இப்படி இந்தியாவும் , சுப்பிரமணிய சுவாமியும் திருத்திய ஐ.நா தீர்மானம் எந்த அளவிற்கு வலுவிழந்து இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. இதை குறித்து இப்போது மாணவர்கள் அறியத் தொடங்கி உள்ளனர். இன்று அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடந்த எழுச்சி ,மிகு மாணவர் போராட்டத்தில் அமெரிக்கா இந்தியா திருத்தம் செய்து கொண்டு வந்த ஐ.நா தீர்மானத்தின் நகலை மாணவர்கள் தீயிட்டு கொளுத்தினர். 

இதன் மூலம் அமரிக்காவின் தீர்மானத்திற்கு தமிழக மாணவர்கள் ஆதரவு தெரிவிக்க வில்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரியவந்துள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten