donderdag 7 maart 2013

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வெனிசுலா ஜனாதிபதி மரணம்!


அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வெனிசுலா ஜனாதிபதி மரணம்!

இந்தத் தருணமே… இப்போதே! நாளை அல்ல… நாளை என்பது மிகத்தாமதம்! ஹியூகோ சாவேஸ் எனும் இணையற்ற நாயகனின் வார்த்தைகளே இவை.
அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வெனிசுலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷ் தனது 58ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக புற்றுநோயால் ஹுகோ சாவேஷ் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காலமாகியுள்ளார்.
கியூபாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு நாடு திரும்பியிருந்த வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷ் சுவாசப் பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
ஹுகோ சாவேஷ் கியூபாவில் நான்காவது தடவையாகவும் புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சையை கடந்த டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி மேற்கொண்டிருந்தார். இதன் பின்னரே அவர் கடுமையான நுரையீரல் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளார்.
வெனிசூலா நாட்டு ஜனாதிபதியாக 1999ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஹுகோ சாவேஷ், ஜனவரி மாதத்திலிருந்து இன்னும் 6 வருடங்களுக்கு ஜனாதிபதியாக பதவி வகிக்கவிருந்தார்.
இவரது மறைவையொட்டி வெனிசூலாவில் 7 நாள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எலியாஸ் ஜோஸ் அறிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten