பாஸ்டன் குண்டுவெடிப்பு: குற்றவாளிகளை விரைவில் நீதி முன் நிறுத்தப்படுவர் | |
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 01:05.56 மு.ப GMT ] | |
சம்பவ இடத்தில் வெடிக்காத 2 குண்டுகளை கைப்பற்றிய பொலீஸார் அவற்றை செயலிழக்கச் செய்தனர். இச்சம்பவத்தையடுத்து, நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் அணு உலைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற சுமார் 2 மணி நேரத்திற்குள் வெள்ளை மாளிகையில் இருந்து டி.வி. வாயிலாக பொதுமக்களிடையே உரையாற்றிய ஒபாமா கூறியதாவது:- இந்த பாதக செயலை யார் எதற்காக செய்தார்கள் என்று இதுவரை நமக்கு தெரியவில்லை. யூகங்களுக்கு இலக்காகி விடாமல் மக்கள் அமைதி காக்க வேண்டும். பாஸ்டன் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவருக்காகவும் நாம் பிராத்தனை செய்ய வேண்டும். ஆனால், இச்சம்பவத்தின் அடித்தளத்தை கண்டு பிடித்து இதை யார் எதற்காக செய்தார்கள் என்பதை வெளிப்படுத்தி, இதற்கு காரணமானவர்களை, அவர்கள் தனிநபர்கள் என்றாலும், இயக்கம் ஆனாலும் நீதியின் முன் நிறுத்துவோம். பாஸ்டன் நகரம் உறுதியானது. அங்கு வாழும் மக்களும் மனஉறுதி மிக்கவர்கள். அவர்கள் ஒன்றிணைந்து தங்கள் நகரின் பெருமையை காப்பார்கள். அவர்களின் ஒற்றுமைக்கு ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் துணை நிற்பார்கள். பாஸ்டன் சம்பவத்தில் தீயணைப்பு துறையினர், தேசிய பாதுகாப்பு படையினர், பொலீஸார் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒவ்வொரு நாளும் தங்களது உயிரை ஓர் பொருட்டாக கருதாமல், ஆபத்தான சூழ்நிலையில் நாட்டு மக்களைக் காப்பாற்ற பலர் உழைத்து வருகிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு விரைவாக மீட்புப் பணியை செய்த அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும் என கூறினார். http://world.lankasri.com/view.php?224MC303lOo4e2BnBcb280Cdd208Ybc3nBze43Olx023WA42 |
Geen opmerkingen:
Een reactie posten