vrijdag 5 april 2013

கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தில் தரம் குறித்த உதிரிப் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன?


இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள தமிழகத்தின் கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையத்தில் தரம் குறைந்த உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் கூடங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  அணுமின்னிலை எதிர்ப்புகுழுவினர் இந்த குற்றச்சாட்டை வெளியிட்டனர்.
இந்த அணுமின்னுற்பத்தி நிலையத்தில் கறுமையான ஒருவகை புகை வெளியேறுவதாகவும், இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இங்கு தரம் குறைவான பொருட்களே பொருத்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுகளை கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையத்தின் நிர்வாகம் நிராகரித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten