தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 maart 2011

ஈழத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் மனித நாகரியத்துடன் நடந்து கொள்ளவில்லை

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப் பேரலையும் ஜப்பானிய மக்களுக்குப் பெரும் அவலத்தைக் கொடுத்துள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் எதிர்கொண்ட மிகப் பெரும் நெருக்கடி இது என ஜப்பானியப் பிரதமர் நஓற்றா கான் தெரிவித்ததிலிருந்து அழிவுகளின் அவலத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஜப்பானிய மக்களின் துயரத்தில் நாமும் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் வழங்க வேண்டியது ஒவ்வொரு மனிதரதும் கடமையாகவே உள்ளது. ஈழத் தமிழர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி ஜப்பானிய மக்களது நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் பெற்றுக்கொள்வது அவசியம்.

ஆயினும், தமிழீழ மக்களது அழிவுகளிலும், அவலங்களிலும் ஜப்பான் வகித்த பாத்திரத்தை நாம் மறந்துவிட முடியாதவர்களாகவும் உள்ளோம். இறுதி யுத்த கால அழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமை ஜப்பானுக்கும் இருந்தது. ஈழத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் மனித நாகரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்ற வேதனை ஒவ்வொரு ஈழத் தமிழனது நினைவையும் விட்டகல மறுக்கின்றது. ஆழிப் பெரும் துயரின்போது ஆதரவு வழங்கிய ஜப்பான், இறுதிப் போரின் காலத்தில் மௌனமாக இருந்து ஒரு இன அழிப்பு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தத் தவறியது என்பதை யாரும் மறுத்துக் கூற முடியாது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கும், அடக்கப்பட்ட தமிழர்களுக்கும் இது ஆண்டவன் வழங்கிய தண்டனை என்ற திருப்தியை வழங்கியிருக்கக் கூடும். இப்போது ஜப்பான் என்றால், எப்போது இந்தியா? என்ற எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு வழங்கியிருக்கும்.

சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, பெரும் கொடையாளி நாடாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுகள் அதிர்ச்சிகரமானது. சிங்கள தேசத்திற்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிதிகள் இன்னமும் சில காலத்திற்கு ஜப்பானால் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதால், ஜப்பானின் பேரழிவு சிங்கள அரசுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று நம்பலாம். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, உள்ளுர் விளை பொருட்களும் அழிவுக்குள்ளான நிலையில், ஜப்பானின் நிதி உதவிக்கும் வந்து சேர்ந்துள்ள ஆபத்து, சிங்கள தேசத்தை ஆட்டிப் படைக்கப் போகின்றது.

சிங்கள தேசத்தின் பொருளாதாரத் தாழ்வு நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும் சீனாவும் இன்னமும் ஊன்றிக் கால்பதிக்கும் நில உருவாகும். அது, அழிவுகளுக்குள் வாழ எத்தனிக்கும் தமிழர்களை விடவும், சிங்கள மக்களுக்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் நிறைந்த கள நிலையை உருவாக்கப் போகின்றது. எனவே, புலம்பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகக் கையாள்வதன் மூலம் தமிழீழம் நோக்கிய பாதையை விரைவு படுத்தலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெறும் அறிக்கைப் போரை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களை குழுக்களாக்கி உடைக்கும் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு, அனைத்துத் தமிழர்களுக்குமான ஜனநாயக அமைப்பாக, புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைப்பதில்தான் தமிழீழ மக்களின் அடுத்த கட்ட வெற்றி தங்கியுள்ளது.

- கரிகாலன்
22 Mar 2011
 
 நொந்துபோயிருக்கையில் பழைய பிழைகளை சுட்டிக்காட்டுதல் அழகல்ல!!அதுவும் தமிழன் அப்படி செய்வது "வெந்த புண்ணில் வேலைப்பாச்சுதல்"என்ற பழமொழி சொன்ன முன்னோருக்கு செய்யும் துரோகம்!!

Geen opmerkingen:

Een reactie posten