தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 december 2011

சிறிய அளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளமை வேடிக்கையான விடயம் - சனல் 4 தொலைக்காட்சி

வதைமுகாமில் நான் -பி.இரயாகரன் !


கண்ணீரை வரவழைக்கும் கொலைவெறி ஆணைக்குழு காமெடி!!-இறுதிப்போரில் படையினர் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்கவில்லையாம்! பரிந்துரைக்கிறது ஆணைக்குழு (அறிக்கை இணைப்பு)

தமிழீழ அரசாங்கத்திற்கு தாலியைக் கொடுத்த தமிழ்த் தாய்??அநாகரீகம்???

தாலியை கொண்டு தரணியை வெல்வதா தமிழ் பண்பாடு?தாலி கணவன் உயிருடன் உள்ளான் என்பதற்காக கழுத்தில் இருப்பது,
உண்மை கலாச்சாரப்படி அதை எடுப்பது கணவன் இறப்பில்தானன்றோ!!!அப்படியானால்??அறுதாலி கொண்டு செய்யும் செயல் விளங்குமா?? விளங்கியதா??

dinsdag 13 december 2011

கொலைக்களங்கள் வீடியோவுக்கு புலிகள் 5 மில்லியன் கொடுத்தார்களா ?

12 December, 2011 by admin

சொன்னா கேளாங்கள்,பின்னால் ஏமாந்ததாக புலுடா வேறா!!-பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா!- அனலை நிதிஸ் ச. குமாரன்!!

CIA இன் உளவாளிகள் அன்ரன் பாலசிங்கம்,மற்றும் தந்தை செல்வா மகன் என்று அன்றே இந்தியாவும் தமிழ் முற்போக்கு இயக்கங்களும் கூறின,இன்று அது உண்மையாகி நாடுகடந்த அரசு அமெரிக்க குடிமகனால் ஆளப்படுகிறது,புலிகள் இறுதிவரை அமேரிக்கா சார்பாக செயற்பட்டு அண்டை நாட்டை எதிரியாக்கினர்,அவர் ஆதரவுகள் இன்றும் அதையே தொடர்கின்றன,இந்தியாவுடன் அமெரிக்கா உறவானதும் புலிகளை அழித்து முடித்தனர்,வேண்டாத செலவு செய்ய அமெரிக்கா என்ன முட்டாளா??தமிழனை பொறுத்தவரை நல்ல தீர்வுகளை எதிர்ப்பதும் தன்னை பலவீனமாக்குவதும் பதவிக்காக உறவுகளை பலிகொடுப்பதும் இறுதியில் ஏமாற்றி விட்டார்கள் என்பதும் முன்னைய தலைவர்களை பழிபோட்டு துரோகியாக்குவதும் பழமையான ஒன்றே,பிரபாகரன் கூட இலங்கை அரசு ஏமாற்றி விட்டது என்று மாவீரர் உரைகளில் குறிப்பிட்டுள்ளார்,இப்போது அனலை கூறுகிறார்.அண்ணன் தம்பியை நம்பாமல் அமெரிக்கனுக்காக உறவுகளை கொன்றால் இதுதான் முடிவு,இப்படித்தான் புலம்பணும்,அன்று கேட்பவன் மறந்தாலும் நின்று கேட்பவன் விடுவானா??உண்மை வழியில் நடந்தால் வெற்றி நிச்சயம்!!

தவறான வரலாற்றை சொல்லும் புனிதச்சுவடுகள் - இலக்குத்தவறா இலட்சியப்பயணத்தில் - மேஜர் வேணுதாஸ்

zondag 11 december 2011

புலியை அழித்தவர்கள் பொதுமக்களுக்கும் ஆப்பு தேடுகிறார்கள் தங்கள் வயிற்றை கழுவ தாலி அறுப்பவர்கள்!

விலகிச் செல்லும் சர்வதேச நேசக்கரம்! அமெரிக்க இந்திய நகர்வுகளை நாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்!
[ ஞாயிற்றுக்கிழமை, 11 டிசெம்பர் 2011, 09:11.56 AM GMT ]
 
அமெரிக்க-இந்திய உறவுக்குள் உடையும் சீனாவின் முத்துமாலை!- இதயச்சந்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 டிசெம்பர் 2011, 01:37.02 AM GMT ]

donderdag 1 december 2011

முதியவர்களை கொலைசெய்த இந்தியப் படையினர் !-அவலங்களின் அத்தியாயங்கள்- 9 –நிராஜ் டேவிட்

முழுப்பூசணியை சோத்தில் மறைக்கும் வேளையில் உள்ள நிராஜ் புலிகளை
தவறாக வழி நடத்த உதவியது போல தமிழ் மக்களை அழிப்பதற்கு உசுப்பேத்தி 
யாருக்கு உதவுகிறாரோ!!! 
[ வியாழக்கிழமை, 01 டிசெம்பர் 2011, 12:19.04 AM GMT ]

zondag 27 november 2011

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரின் மாவீரர் நாள் நிகழ்வுகள்

பிரான்ஸ் ஒபேவில்லியஸில் இடம்பெற்ற மாவீர் நாள் நிகழ்வு!

மாவீரர் நாள் 2011 டென்மார்க்கில் கேர்ணிங் கொள்பேக் நகரங்களிலுள்ள பிரமாண்டமான மண்டபங்களில் நடாத்தப்பட்டன

நோர்வேயில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

[ திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011, 09:42.02 PM GMT ]
நோர்வே தலைநகரம் ஒஸ்லோவில் மாவீரர்நாள் நிகழ்வுகள் வெகுசிறப்பாக நடைபெற்றது. 3000 வரையிலான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
தேசியக்கொடியினை வீரவேங்கை நரேனின் சகோதரர் ஏற்றியதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழகத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் திரு.போல் நியூமன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
அத்தோடு நோர்வேயில் உள்ள குடும்பங்களின் மாவீரர்களின் விபரம் தொடர்பான புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் தமிழ், நோர்வேஜியன் ஆகிய இருமொழிகளிலும் வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓஸ்லோ தவிர்ந்த Stavanger,Bergen, Trondheim,Molde,Hareid ஆகிய நகரங்களிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

யேர்மனியில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011

[ திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011, 09:34.00 PM GMT ]
யேர்மனி, டோர்ட்முண்ட் நகரில் 27.11.2011 அன்று தமிழர்களின் தாயகத்துக்காக தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் பதித்து நினைவு கூரும் முகமாக மாவீரர் நாள் 2011 மிக எழுச்சிபூர்வமாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் 8000 க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு தங்கள் தேசியக் கடமையை நிறைவேற்றினர்.
தேசிய மாவீரர்நாள் நினைவு வணக்க நிகழ்வில் முதலாவதாக பொதுச்சுடரினை பேராசிரியர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளார்
ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கீதத்துடன் தேசியக்கொடியை மாவீரர், வீரவேங்கை திருமாறன் அவர்களின் தாயார், திருமதி. தெய்வேந்திரம் பவானியம்மா அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதனை அடுத்து பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட மாவீரர்துயிலுமில்லத்தில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை மாவீரர் லெப்டினன்ட் மேகலா அவர்களின் சகோதரி, திருமதி. நந்தகுமாரி சிவராயா அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டது .
அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் இணைந்து தமிழீழம் மலர அயராது தேசியத் தலைவரின் உறுதியோடு தளராமல் பயணிப்போம் என உறுதிமொழி கூறினர்.
மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தமது தியாக செல்வங்களுக்கு மலர்தூவி சுடர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து அரங்கமேடையில் தமிழீழம் இசைக்குழு, இராக வேங்கை இசைக்குழுவின் இசைவணக்கம், சிறுவர் உரை, கவிதை, எழுச்சி நடனங்கள், நாடகம், நாட்டிய நாடகம், மாவீரர் வெற்றிக்கிண்ணப் பரிசளிப்பு, இறுவட்டு வெளியீட்டு நிகழ்வுகள், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன், வை.கோ ஆகியோரது மாவீரர்நாள் செய்திகள் ஒளிவடிவில் ஒலிபரப்பட்டமை, யேர்மனியில் கைதுசெய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர்களுக்கான மனிதநேயப் பணியாளர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்களுக்கான கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகள் சிறப்பாகவும் எழுச்சிபூர்வமாகவும் இடம்பெற்றன.
சிறப்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், மனித நேயப்பணியாளர்கள் யேர்மன் அரசாங்கத்தால் கைது செய்யப்படதை தொடர்ந்து அதற்கு எதிராக தமது வழக்கை வெற்றிகரமாகக் கொண்டு சென்று தமது விடுதலைக்கு காரணமான திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் குழுவுக்கு சிறப்பான கௌரவம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கப்பட்டது .
அதை தொடர்ந்து மனிதநேயப் பணியாளர்கள் சார்பில் இவ்வழக்குத் தொடர்பாக வாதிட்ட வழக்கறிஞர்களின் இணைப்பாளர் வழக்கறிஞர் திரு Nagler அவர்கள் இவ்வழக்குத் தொடர்பாகத் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
அத்தோடு இவ் மாபெரும் நினைவெழுச்சியில் தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்திருந்த புதிய பார்வையின் ஆசிரியரும், தமிழக முதல்வரின் தோழி சசிகலா அவர்களின் துணைவரும், ஐயா பழ. நெடுமாறன், திரு. வை. கோ, த. பாண்டியன் போன்ற தமிழீழ ஆதரவுத் தலைவர்களோடு இணைந்து தமிழீழ மலர்வுக்காய் உழைத்து வருபவரும், தஞ்சாவூரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற நினைவிடக் கட்டுமானப் பணிகளைப், பழ. நெடுமாறன் அவர்களோடு சேர்ந்து முன்னெடுத்து வருகின்ற தமிழ் உணர்வாளரும், தமிழகத்திலிருந்து வருகை தந்தவருமான, திரு. ம. நடராஜன் அவர்களும்,பேராசிரியர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும் , சிறப்புரைகள் வழங்கினர்.
மாவீரர்களின் இலட்சியத்தை நிறைவேற்ற தனித் தமிழீழமே தமது நோக்கு எனும் பாதையில் பயணிக்கும் வகையில் இப் புனித மாதத்தில் யேர்மன் சட்டங்களுக்கு அமைய பதிவுசெய்யப்பட்ட யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை 2011 றாம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சந்திப்புகளின் மற்றும் வேலைத்திட்டங்களின் விபரங்களை "தகவல் மையம்" ஊடாக மக்களுக்கு தெரிவித்தனர் .
இறுதியாக தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்தை அனைத்து மக்களும் இணைந்து உரத்துக்கூறி "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் " பாடலுடன் நிகழ்வினை நிறைவேற்றினர்.