தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 december 2011

கொலைக்களங்கள் வீடியோவுக்கு புலிகள் 5 மில்லியன் கொடுத்தார்களா ?

12 December, 2011 by admin

கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள ஆசிய சமூகம் என்னும் அமைப்பு நடத்திய மாநாடு ஒன்றில் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தை தாயாரித்த கலம் மக்ரே அவர்கள் கலந்துகொண்டுள்ளார். சனல் 4 தொலைக்காட்ச்சி தயாரித்த கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் முதன்மைத் தயாரிப்பாளரான கலம் மக்ரே அவர்கள் தனது கருத்துக்களை அங்கே தெரிவித்துள்ளார். கொலைக்களங்கள் ஆவணப்படத்தை தயாரிக்க விடுதலைப் புலிகள் 5 மில்லியன் டாலரை தந்ததாக இலங்கை அரசு கூறுவதை அவர் வன்மையாகக் கண்டித்தார். அடுத்து ஜனவரி மாதம் வர இருக்கும் தண்டிக்கப்படாத குற்றங்கள் என்ற ஆவணப்படத்தைப் பற்றியும் அவர் மேலதிக விளக்கங்களைக் கொடுத்துள்ளார். சர்வதேச நெருக்கடிக் குழுவும் இதில் கலந்துகொண்டுளது.

இலங்கை அரசின் சார்பாக மிலிந்த செனவரட்ன கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு சார்பான கருத்துக்களை முன்வைத்தார். பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கலம் அவர்கள் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணைகள் தேவை எனக் குறிப்பிட்டார். அத்தோடு மட்டுமல்லாது இறுதிப்போரில் நடைபெற்ற சில போர்குற்றங்களுக்கான புது ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மருத்துவமனைகளையும் தற்காலிக சிகிச்சை நிலையங்களையும் குறிவைத்து நடத்திய தாக்குதலுக்கு தம்மிடம் வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்துவிட்டதா என்ற தலைப்பில் நடைபெற்ற இம் மாநாட்டிற்கு நியூஸ் வீக் இன்ரர் நஷனல் ஊடகத்தின் ஆசிரியர் துங்கு வரதராஜன் அவர்கள் தலைமையேற்று நடத்திவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதம் வெளிவர இருக்கும் தண்டிக்கபடாத குற்றங்கள் என்னும் புதுக்காணொளியில் இதுவரை வெளியாகாத சில புது ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தற்போது கலம் அவர்கள் வெளியிட்டுள்ளார். இதனால் இலங்கை அரசு மேலும் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒரு நீதி கிடைக்கவேண்டும் இலங்கை அரசு தண்டிக்கப்படவேண்டும் என்பதில் சனல் 4 தொலைக்காட்சியில் வேலைசெய்யும் கலம் மக்ரே அவர்கள் தனது சக்திக்கும் மீறிச் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்க விடையமாகும்.


Geen opmerkingen:

Een reactie posten