கனடாவின் ரொரன்ரோ பகுதிக்கான தமிழ் அமைப்பொன்றின் 'சேவை அமைப்பு' என்ற தகமையை (charitable status) கடந்த வாரத்திலிருந்து கனேடிய சமஸ்டி அரசாங்கம் நிறுத்தம் செய்துள்ளது.
அதாவது தமிழ்ப் புலிகளிற்கு ஆதரவு வழங்குகின்ற குழுக்களுக்கு இவ்வமைப்பு நிதி வழங்குகின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே இவ்வமைப்பின் சேவை சார் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கனேடிய தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமானது கனடாவிற்கு வெளியே செயற்படும் சட்ட ரீதியற்ற சில நிறுவனங்களிற்கு 700,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வழங்கியுள்ளதாக கனேடிய வருமான அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.
இத்தமிழ் அமைப்பின் செயற்பாட்டை நிறுத்தம் செய்வதற்கான அறிவித்தலை கனேடிய வருமான அமைப்பு வழங்கியிருந்தது. முதலில் கனேடிய தமிழ் அகதிகள் அமைப்பின் மீது முதன் முதலில் நவம்பர் 2009ல் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டது. அதாவது யூன் 2004 தொடக்கம் மே 2008 வரை இப்புனர்வாழ்வு நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதன் பின்னரே இதன் மீது முதன் முதலில் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இந்நிறுவனம் மே 2005 மற்றும் ஜனவரி 2006 ல் ஆழிப்பேரலை அனர்த்த நிதியாக 620,000 அமெரிக்க டொலர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடமும், பெப்ரவரி 2005 தொடக்கம் யூன் 2007 வரை 113,930 அமெரிக்க டொலர்களை சிறிலங்காவில் உள்ள இராமகிருஸ்ண அமைப்பிடமும் வழங்கியதாக கணக்காய்வின் மூலம் தெரியவந்திருந்தது. இக்காலப்பகுதியில் கனேடிய தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் மொத்த வருவாயின் 81 சதவீதம் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட்டது.
வெளிப்படையாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் இராமகிருஸ்ண அமைப்பு என்பன தமிழ்ப் புலிகள் அமைப்பின் ஆதரவுடன் இயங்குபவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக, கனேடிய தமிழ் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் சட்டவாளருக்கு கனேடிய வருமான அமைப்பினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் என உத்தியோகபூர்வமாக அறியப்படும் ஆயுதக் குழுவானது 1976 இலிருந்து, 2009ல் சிறிலங்கா இராணுவத்தால் தோற்கடிக்கும் வரை செயற்பட்டது. இவ்வமைப்பானது கார்ப்பர் அரசாங்கத்தால் 2006 ல் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கனேடிய வருமான அமைப்பிற்கு அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், "கனேடிய தமிழ் அகதிகள் நிறுவனமானது எந்தவொரு பயங்கரவாத அல்லது அரசியற் குழுக்களுடனும் தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது சிறிலங்காவில் பதிவு செய்யப்பட்டு இயங்கும் சமூக சேவைகள் அமைப்பு. அத்துடன் இவ்வமைப்பின் செயற்பாடானது கனேடிய மற்றும் அமெரிக்க, சிறிலங்கா அரசாங்கங்களால் அங்கீகரிக்கபட்டுள்ளது. சிறிலங்காவில் உள்ள சிறார்கள் நலன் திட்டத்திற்கு நிதியுதவி வழங்குவதென இராமகிருஸ்ண அமைப்புடன் 1988ல் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது" எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இக்கனேடிய தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமானது போதியளவு கணக்குப் பதிவுகளையோ அல்லது ஆவணங்களையோ பாதுகாப்பதில் தவறிழைத்துள்ளதாகவும், மூன்றாம் தரப்பினர் சார்பில் முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட வரிக்கான சிட்டைகளைக் கொண்டிருப்பதாகவும் கனேடிய வருமான நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே இவ் இடைக்கால தடை உத்தரவு என்பது, இந்நிறுவனத்திற்கு வருமான வரிக்கான விலக்களிப்பு வழங்கப்படாததுடன், இதற்கான நன்கொடை வரிக்கான அனுமதியும் நிறுத்ம் செய்யப்பட்டுள்ளதென்பதே இதன் கருத்தாகும்.
இக்கனேடிய தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமானது 1985ல் நிறுவப்பட்டதுடன், இதற்கான அஞ்சல் முகவரியாக Mississauga உள்ளது. இதனுடைய தலைவரான அருணாசலம் அரசரட்ணம் எந்தவொரு கருத்துக்களையும் கூறமறுத்துவிட்டார்.
இந்நிறுவனத்தின் அனுமதியில்லாமல் இவ்வழக்குத் தொடர்பாகத் தன்னால் எதையும் கலந்துரையாட முடியாது எனவும், ஆனால் தான் பெற்றுக் கொண்ட அனுபவத்தின் படி, இந்நிறுவனத்திற்கான சேவை தகைமையை கனேடிய வருமான அமைப்பு நீக்கியதானது 'நியாயமற்ற, மிகவும் செருக்குத்தனமான' நடவடிக்கையாக உள்ளதாக கனேடிய தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் சட்டவாளர் ஹரி எஸ். நேசதுரை தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவிற்கு அப்பால் பெருமளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற நாடுகளில் கனடாவும் ஒன்றாகும்.
செய்தி வழிமூலம்: The Toronto Star

Geen opmerkingen:
Een reactie posten