தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 december 2011

தமிழீழ அரசாங்கத்திற்கு தாலியைக் கொடுத்த தமிழ்த் தாய்??அநாகரீகம்???

தாலியை கொண்டு தரணியை வெல்வதா தமிழ் பண்பாடு?தாலி கணவன் உயிருடன் உள்ளான் என்பதற்காக கழுத்தில் இருப்பது,
உண்மை கலாச்சாரப்படி அதை எடுப்பது கணவன் இறப்பில்தானன்றோ!!!அப்படியானால்??அறுதாலி கொண்டு செய்யும் செயல் விளங்குமா?? விளங்கியதா??
 
அப்படியானால் அவர் விதவையா அல்லது கணவனை தாரை வார்த்து 
கொடுக்கிறாரா??நாம் தமிழுக்கு அதன் பண்பாட்டுக்கு கொடி பிடிப்பதாக சொல்லி
விட்டு அதன் தார்ப்பரீகங்களை கொச்சைப் படுத்துவதால்தான் வெற்றி 
எட்டாக்கனியாக உள்ளது,அடுத்தவரின் தாலியை பிடுங்கியா போராட
வேண்டும்,அது சாபம்.அதை வேறு படம் போட்டா பெருமைப்படுகிறோம்.
முதலில் எதற்காக போராடுகிறோம் என்று அறித்தாலே பாதி வெற்றி!!
 
தமிழையும் அதன் பண்பாட்டையும் மதியுங்கள்,வெள்ளையனின் கைக்
கூலிகளிடம் தாலியை பரி கொடுக்காதீர்கள்,மண்ணுக்காக மானமாய் 
வாழுங்கள்!!
 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் அமர்வின் மூன்றாம் நாள் நிகழ்வின் போது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குப் பங்களிப்பு செய்யுமுகமாக பாராளுமன்ற சபையில் ஈழத்தாய் தனது தாலிக்கொடியைக் கழற்றி அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் மக்களும் தங்கள் பங்களிப்புகளை நகைகள் மூலமாகவும் பணமாகவும் செய்தனர்.
இந்த நிகழ்வின் போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பேராளர் ஜெயபாலன் அழகரத்தினம் அவர்கள் தனது மனைவி மாவீரர் குடும்பத்தைச் சார்ந்தவராதலால் அவரது அனுமதி இன்றியே அவரது தாலிக் கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்திருந்தது.
தனது தாலிக் கொடியைக் கழற்றிக் கொடுத்து முன்னுதாரணமாக விளங்கிய தமிழ்த் தாய்க்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும் பேராளர்களும் கண்ணீர் மல்க தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten