பாராளுமன்றுக்கு அழைத்து வரப்பட்டிருப்பவர்கள் முன்னாள் போராளிகள் அல்ல, அவர்கள் எமது உறவுகள் எனது சகோதரிகள். அவர்களுக்கு சீருடை அணிவித்து அழைத்து வந்து காட்டிக் கொடுத்து விட்டீர்கள். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. திருமதி விஜயகலா மகேஸ்வரன் சபையில் நேற்று ஆவேசப்பட்டார்.
அமைச்சர்களே! உங்களுடைய சகோதரிகளாக இருந்தால் இப்படி செய்வீர்களா? சீருடை அணிவித்து முன்னாள் புலி போராளிகள் என ஏன் பகிரங்கப்படுத்த வேண்டும்? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதம் நடைபெற்றது. இதனைப் பார்வையிடுவதற்காகவே மேற்படி 105 பெண் போராளிகளை பாராளுமன்றக் கலரிக்கு அழைத்து வருவதற்கு குறித்த அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
மன்றின் பார்வையாளர் கலரிக்கு வருகை தந்த இவர்கள் சுமார் அரைமணி நேரமளவில் சபை நடவடிக்கைகளை அவதானித்தனர். பின்னர் ஏற்பாட்டாளர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கான மதிய உணவும் பாராளுமன்றத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை முன்னாள் விடுதலைப்புலிப் பெண் போராளிகள் சபை நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக அழைத்து வரப்பட்டதையிட்டு ஆளுங்கட்சி உறுப்பினர்களான சில்வேஸ்திரி அலன்டின், ஏ.எச். எம். அஸ்வர் மற்றும் அமைச்சர் ஹக்கீம் ஆகியோர் தமது மகிழ்ச்சியை வெளியிட்டதுடன் வரவேற்பும் தெவித்தனர்.
சபைக்கு வருகை தந்த முன்னாள் புலிப் போராளிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அஸ்வர் எம்.பி. கூறுகையில், முன்னாள் புலிப் போராளிகள் இன்று இந்த சபைக்கு வருகை தந்திருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களை வரவேற்கின்றோம்.
போராளிகள் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். அதுவும் உலகிலேயே இது முதற்தடவையாகும் என்றார்.

Geen opmerkingen:
Een reactie posten