தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 april 2011

தமிழினத் துரோகிகள் இவர்களே...! : தினமணி!!!!!

நாற்காலி அரசியல் ராஜபக்ஷேவை வீழ்த்தாது!

விடுதலைப்புலிகளின் தலைவர் மேற்கத்தேய நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே செயற்பட்டார்: சதாசிவம் கனகரத்தினம்

 

போர்க்குற்றங்கள் தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது

 

தளபதி ரமேஷ் சித்திரவதையின் பின் சீருடையணிந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

 

புலம்பெயர்ந்த தமிழர்களை ஐக்கிய நாடுகள் அறிக்கை வலிந்து இணைத்துள்ளதன் மர்மம் என்ன?

[ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 09:49.37 PM GMT ]

கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு கொல்லப்பட்டுள்ளார்

[ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 02:50.47 PM GMT ]

zaterdag 23 april 2011

முடிந்தால் பிடித்துப்பாருங்கள்: தீபனுடன் வோக்கியில் சவால்விட்ட சிங்கள இராணுவம் !

பக்கசார்பு,புழுகு,பொய் இவைதானா தமிழன் என்பதற்கான ஆதாரங்கள்!!


அமெரிக்காவின் செல்லப்பிராணியும்  நன்றியுள்ள நாயுமான  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பற்றிய அறிக்கையின் பிரகாரம் புலிகளே மோசமான மீறல்கள் செய்துள்ளனர்!அரசு அதற்கிணையாக பாரிய முயற்சிகள் செய்தும் தோற்றுள்ளது.எனினும் விளக்கமற்ற இரு பக்கமும் சேற்றை அள்ளி வீசுவதாக நினைத்து தம்மீது பூசுவதுடன் இலங்கை ஒரு அமெரிக்ககாலணி நாடு என்பதையும் அடிக்கடி கூறி தாம் அடிமைகள் என்பதால் பெருமிதமும் அடைகின்றனர்!!இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்து  வைத்திருக்கவும் சீனாவுடனான இலங்கையின் நட்புறவை மட்டுப்படுத்துவுமே அமெரிக்க சார்புநாடுகள்,அமெரிக்கா இணைந்து ஐக்கிய நாடுகள் சபை மூலம் அறிக்கை வெளியிட்டு பயமுறுத்துகின்றன!!என்றுமே பகுத்தறிவு பேசி பகுத்தறியா தமிழன் தனக்காக தன் எஜமான் பேசுவதாக எண்ணி தன்னையும் மற்றவரையும் இணைய தளங்கள் மூலமும் பத்திரிகைகள்,சஞ்சிகைகள் மூலமாகவும் ஏமாற்றி,உளறிவருகின்றான்.இவனே இவனினத்தை அந்நியரிடம் அன்றும் இன்றும் காட்டிக்கொடுத்து வீர பரம்பரையை விளங்காத பரம்பரையாக,அடிமைகளாக ஆக்கியவன்.இவனை அடையாளம் கண்டு ஒதுக்காதவரை தமிழன் அமெரிக்க கூலி,அடிமைதான்!!

இலங்கை தமிழரின் சிந்தனைகளும் சிங்களவரின் சிந்தனைகளும் ஒரே மாதிரி அமைவது இருவரும் ஓரினம் என்பதாலா??

மகிந்தவை முன்னிறுத்துவதில் சிங்கள அரசியலும் அதிகாரிகளும் காட்டிய ஆர்வம் போன்றே அவரை அவமானப்படுத்துவதில் புலியாதரவுத்தமிழர் மிக மிக ஆர்வமாயிருந்தனர்,அதற்காக பல இணைய தளங்களையும் குறிப்பாக முகப்புத்தகத்தையும் பயன்படுத்தினர்.பத்திரிகையின் தலைமையின் தன்னிச்சையான முடிவாலும் அதிகார அகந்தையாலும் அப்போட்டி முடிவுக்கு வந்துவிட்ட்டது.எனினும் விழுந்தவன் மீசையில் மண்படவில்லை?!!

vrijdag 22 april 2011

இன்று ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

 (வீடியோ இணைப்பு)

ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜெயலலிதா

அதிகார துஸ்பிரயோகம் பத்திரிக்கை தலைமையகத்திலும்!!

மஹிந்தவின் பெயர் அதிரடி நீக்கம் - டைம்ஸ் நடவடிக்கை

பாம்பின்கால் பாம்பறியும்

அன்று தமது அரசியல் எதிரிகளை பழிவாங்க தமிழ் இளைஞரை தவறாக வழிநடத்திய தமிழர் விடுதலைக்கூட்டணி இன்று கூட்டமைப்பு என்ற பெயரிலும் அதை தொடர,இன்னுமே விழித்தெழாத தமிழர்கள் அவர்களை நம்புவதும் அவர்களுக்காக நவீன தொடர்பாடல்களில் பிரச்சாரமழை பொழிவதும் மாற்றுக் கட்சிகள் காசுக்கு ஆட்களை திரட்டுவதாக புலம்புவதும் வேடிக்கை மட்டுமல்ல,வேதனையும்தான்.இவர்களுக்காக என்றே ஒரு பழமொழி அன்றே கூறப்பட்டுள்ளது.அது`பாம்பின்கால் பாம்பறியும்`விளங்கினால் சரிதான்!!

donderdag 21 april 2011

அதிர்வு அறியுமா உண்மைதனை!!

அதிர்வின் உறுப்பினர்கள் யாராவது வன்னி இறுதி மோதலின் போது தலைவனின் கட்டளைகளையும் நடேசர் மகனுக்கு சொன்னதையும் கோழைத்தனமான சரணடைதல் முயற்சிகளையும் நேரில் நின்று அறிந்தார்களா தெரியவில்லையே!!BBC tamil க்கு பேட்டியளித்த புலித்தேவனும் நடேசனும் எக்காரணத்துக்காகவும் தாம் பின்வாங்கவோ,சரணடையவோ போவதில்லை என்பதை ஆணித்தனமாக கூறியிருந்தனர்.அப்படியிருக்க சரணடைந்த கதை எப்படி உண்மையானது?கொள்கைக்கு ஏற்புடையதாக உள்ளதா இக்கதை??

வன்னி மக்களை சிறீலங்கா அரசு நடத்தும் விதம்! அதிர்ச்சிப்படங்கள் இணைப்பு

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !

(வீடியோ இணைப்பு)

நிராஜ் டேவிட்டின் மேலும் ஒரு பக்கசார்பு வாதம்!!

இலங்கை இராணவத்தின் துணையுடன் கருணா அணியை பிரபா அணி சுற்றிவளைத்து கொலை புரிந்ததென்பதை கிழக்கு மட்டுமல்ல இலங்கை தமிழர் அனைவரும் அறிவர்,அப்படியிருக்க முழுப்பூசணிக்காயை நிராஜ் எப்படி சோற்றினுள் மட்டுமல்லாமல் செர்ராலும் மறைக்கின்றார் என்பதை பாருங்கள்.இப்படியான தொடர் பாவத்தினாலும் பொய்களினாலுமே புலிகளின் போராட்டமும் தமிழரின் வாழ்வும் அழிவுக்குள் திணிக்கப்பட்டன!!
அப்படியிருக்க இதன் மூலம் தான் ஒரு புலி அடிவருடி என்பதுடன் பல காலங்களுக்கு தலைமை தாங்கி வெற்றியை கொடுத்த கருணா முட்டாள் என்பது போலவும் சொல்கின்றார்,காலமே காணாத தலைமை திட்டமிடுமானால் காலத்திலேயே நின்ற கருணாவால் முடிந்திராதா??அநியாயமான பாரிய இழப்பின் பின்னால்தான் புலிகள் இறுதி சமரை எதிர்போரில்லாமலே தோற்றனர் என்பதும் திறமையான தளபதி இல்லாமைதான் தோல்விக்கு முதற்காரணம் என்பதும் மக்கள் மத்தியில் நின்றே ராணுவத்துடன் இறுதிவரை சமராடினரென்பதும் வன்னியில் இருந்தோருக்கு நன்கு தெரியும்.அப்படியிருக்க சுவிசில் இருந்து பொய்யரின் புழுகுகள் யாருக்காக.அவரின் வயிற்றுக்காகவா??

woensdag 20 april 2011

புலம் பெயர் தமிழர்கள் கைதுசெய்யப்பட வேண்டும்!!

இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி நாட்களில் விடுதலைப் புலிகள் 600 சிவிலியன்களை கொன்றொழித்தனர்: முன்னாள் எம்.பி. கனகரத்தினம்

[ புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011, 01:45.35 AM GMT ]
இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி நாட்களில் சுமார் 600 சிவிலியன்களை விடுதலைப் புலிகள் கொன்றொழித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் குற்றம் சாட்டுகின்றார்.
ஆசியன் ட்ரிபியூன் ஆங்கில இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோரையும் படுகொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
அவர்கள் இருவரும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட சிவிலியன்களின் சடலங்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்ட போதே தான் அதனைக்கண்டதாகவும், விசாரித்துப் பார்த்தபோது அவர்கள் விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட விடயம் தெரிய வந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இரகசியப் பொலிசார் நான்காம் மாடியில் தன்னைத் தடுத்து வைத்து விசாரித்த போது தான் இந்த விபரங்களை குறிப்பிட்டிருந்த  போதிலும் அவர்கள் அது தொடர்பில்  போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

அமெரிக்க எடுபிடியான ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவை பகைத்தால் சோத்துக்கு எங்கே போகும்???

zaterdag 16 april 2011

இலங்கை அரசை புகழ்ந்ததால் ஸ்ரேயாவுக்கு எதிர்ப்பு

[ Saturday, 16 April 2011, 10:26.32 AM GMT +05:30 ]
இலங்கையில் நடந்த சினிமா சூட்டிங்கிற்கு சென்ற நடிகை ஸ்ரேயா, இலங்கை அரசை புகழ்ந்து பேசியதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் புதிய படமான "வின்ட்ஸ் ஆப் சேஞ்ச்" படத்தின் சூட்டிங் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ரேயா, சூட்டிங்கிற்காக இலங்கை சென்றிருந்தார்.

அப்போது இலங்கை அரசை அவர் பாராட்டி பேசியதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என்று நடிகர், நடிகைகள் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். லிபியா போன்ற நாடுகளில் மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை ஐ.நா சபை கண்டித்து யுத்தமும் நடத்தி வருகிறது.

அதே நிலைமை தான் இலங்கையிலும் நடந்தது. லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்க்ஷே அரசு கொன்று அழித்தது. அவர் மீது மனித உரிமை மீறல் விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஸ்ரேயா இலங்கை படப்பிடிப்புக்கு சென்றது கண்டிக்கத்தக்கது.

நிறைய தமிழ் படங்களில் ஸ்ரேயா நடித்து உள்ளார். அவர் சமூக அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும். ஸ்ரேயா இலங்கை போனது மட்டுமின்றி அந்த நாடு அழகாக இருப்பதாகவும் படப்பிடிப்புகள் நடத்த உகந்த நாடு என்றும் புகழ்பாடி இருக்கிறார்.

ஸ்ரேயா பேச்சை வன்மையாக எதிர்க்கிறோம். இலங்கைக்கு சாதகமாக நடந்து கொள்ளும் அவரது நடிவடிக்கைகள் தொடர்ந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம். ஸ்ரேயா படங்களை புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார்.

vrijdag 15 april 2011

சுயநலத்தால் தொலைத்ததை பொதுநலம் வராமல் மீட்பது எப்படி?

எல்லாமே பணத்தை நோக்கியே!!வெளிநாட்டிலிருந்து வரும் குரல்கள் வெறுப்பானவை,கசப்பானவை!

woensdag 13 april 2011

உண்மை பேசினால் அவர் தமிழருக்கு எதிரானவர்!!

போராட்ட வரலாறின் போது தமிழ்மக்களுக்காக ஆயுதமேந்தியதாக கூறி,தமது சுய லாபங்களுக்காக சிங்கள அரசின் காலடியில் பணிந்தவரெல்லாம் உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்து,கூட இருந்தே குழிபறித்து தியாகிகளாகையில் உண்மைகளை சொல்பவர் துரோகிகள்தான்!!வரலாற்றை மறந்த பல்கலைக்கழக புத்தகப்பூச்சிகள் புனிதமிழந்து,சார்ப்புபேசி வாழ்வது இன்றல்ல,நேற்றல்ல.நமது வரலாறே படித்த முட்டாள்களால் நாசமாக்கப்பட்டதுதான்.அனுபவ அறிஞர்கள் அன்றே சொன்னது போல ஏட்டுச்சுரக்காய் கறிக்கு....,அப்படியிருக்கையில் இப்புலம்பலும் இனிதே!!

இலங்கையில் ரயில் மோதி பெண்ணொருவர் உயிர் தப்பினார்

(வீடியோ இணைப்பு)

dinsdag 12 april 2011

யாழ். ஊர்காவற்றுறையில் தந்தையால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மகள் ஆஸ்பத்திரியில் அனுமதி


ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்ற படைச்சிப்பாய் மக்களிடம் மாட்டினார்

[ திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011, 03:20.09 PM GMT ]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரிடமிருந்து தமிழக முதலமைச்சருக்கு அவசரக் கடிதம்

[ திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011, 02:16.23 PM GMT ]

தமிழ் படங்களில் கூட பாத்திருக்க முடியாத மிகவும் கொடூரமான சண்டைகாட்சி

 (வீடியோ இணைப்பு)
10 Apr 2011

ஒரு வயதில் உங்களால் முடிந்திருக்குமா…?

 (வீடியோ இணைப்பு)


மறுக்காமல் பாருங்கள்… ஒரு வயதேயான குழந்தை ஒன்று தான் பார்த்தறிந்த நடனக்கலையை உங்கள்முன் வெளிப்படுத்த முனைகின்றது…

பண்டைய காலங்களில் சித்திரவதை

(படங்கள் இணைப்பு)

donderdag 7 april 2011

உண்மைதானா இதுவும் திரிப்பா?

அமெரிக்க,ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு எதிராக வந்த தமிழ் போராட்டங்களும் அதை வளர்த்ததாக கூறும் ஐரோப்பிய அமெரிக்க வாழ் தமிழரும்!!!

கனடா உதயன் பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் பொய் உண்மை ஆகிடுமா சொல்!!

ஐரோப்பாவை(அமெரிக்கா) எதிர்த்தால் அடக்கும் யுத்தம் ஆரம்பிக்கும்,நியாயம் சொல்ல ஐக்கிய நாடுகள் சபை துணை நிற்கும்!!

நேட்டோ இராணுவம் ஐவரிகோஸ்டில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 05 ஏப்ரல் 2011, 11:35.00 மு.ப GMT ]
ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி லோரண்ட் கபகோவின் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து நேற்றைய தினம் ஐக்கிய நாடுள் மற்றும் பிரான்சியப் படைகள் தாக்குதல் தொடுத்துள்ளன.
பிரான்சின் ஹெலிகொப்டர்கள் அப்பிரதேசங்களில் தாழ்வாகப் பறந்து குண்டுகளை வீசியதாக பன்னாட்டுச் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் போது ஜனாதிபதியின் மாளிகையும் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளது. கபகோவின் படைகள் அந்நாட்டு சிவிலியன்களை இலக்கு வைத்துத் தாக்குதல் மேற்கொள்வதைத் தடுப்பதற்காகவே தாம் தாக்குதல்களை மேற்கொண்டதாக நேட்டோ படைகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அலஸ் சென் அவுட்டாரா தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் ஐவரிகோஸ்டின் தலைநகரைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, சர்வதேசப் படைகள் அவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றன.

இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்களின் போது இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க,ஐரோப் சார்பு தமிழர் வெளியிடும் பக்கசார்பு செய்திகள்!

ஆடு நனைவதாக அழும் ஓநாய்களும் அவற்றை நக்கி வாழும் நம்மினவுதிரிகளும்!!

dinsdag 5 april 2011

புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரப் பெருஞ்சண்டை – பேரழிவின் ஆரம்பம்

 
[ செவ்வாய்க்கிழமை, 05 ஏப்ரல் 2011, 06:53.20 AM GMT ]
ஏப்ரல் 05, 2009 – ஆனந்தபுரம். புதுக்குடியிருப்பின் உள்நுழைவுப் பகுதி சண்டையிடமாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கட்டளை மையம் தகர்க்கப்பட்ட ஒரு சண்டையிது. யாருமே நம்ப மறுத்த, இப்போதும் நம்ப மறுக்கின்ற அழிவுகளை தமிழ்மக்கள் பெற்றுக் கொண்ட மண் இது.
போரின் இறுதிக்கட்டம். 2009ம் ஆண்டு மார்ச் 29ம் திகதி சிறுக ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் 5ம் திகதி வரைத் தொடர்ந்த இச் சண்டை தமிழீழ ஆயுதப் போராட்ட வரலாற்றையே புரட்டிப் போடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
இரண்டு வருடங்கள் என்ன இருநூறு வருடங்கள் போனாலும் மறக்கமுடியாததாய் அமைந்து போன அச் சண்டை நடைபெற்ற போது பெரிதாகத் தோன்றவில்லை.
ஒரு பெரும் எதிர்த்தாக்குதலிற்குத் தயாராகிக் கொண்டிருந்த எங்கள் மண்ணின் மைந்தர்களை சிங்களம் லாவகமாக வளைத்துத் தொடுத்த தாக்குதல் அது.
இச் சண்டை எங்களிற்குப் பேரிழப்பொன்றை ஏற்படுத்திச் சென்றதை நாங்களும் பதிந்தேயாக வேண்டும். ஏனென்றால் இச் சண்டையில் இழந்தவர்கள். அசாதாரண தமிழ் மறவர்கள். ஒரு தேசத்தையல்ல, பல தேசங்களின் ஆதரவுடன் பொருதிய எதிரியை புறமுதுகிடச் செய்தவர்கள்.
சிங்கள இராணுவத்தின் 55ம் படையணி, 53வது படையணி, 8வது விசேட படையணி என பல்லாயிரம் இராணுவத்தை எதிர்கொண்டு புரியப்பட்ட இப் போரில் நாங்கள் பலிகொடுத்தவர்கள் சாதாரணமறவர்கள் அல்ல.
விடுதலைப்புலிகளின் இராணுவக் கட்டமைப்பின் சிறந்த தளபதியான கேணல் தீபன், கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் தளபதியான பிரிகேடியர் மணிவண்ணன், சோதியாப் படையணியின் தளபதியான கேணல் துர்கா, மாலதிப் படையணியின் தளபதியான கேணல் விதுசா, ஜெயந்தன் படைப்பிரிவின் தளபதியான கேணல் கீர்த்தி, கேணல் நாகேஸ்,
படைப்பள்ளிப் பிரிவின் தளபதியான கேணல் கடாபி, ராதா படைப்பிரிவின் தளபதியான கேணல் சிலம்பரசன், “குட்டி சிறி மோட்டார் படைப்பிரிவின்” தளபதியான கேணல் கோபால், பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவின் தளபதியான அன்பு,
தவிர இன்னமும் பலர் பிரிகேடியர்கள், கேணல்கள் என மாத்திரமல்ல எங்கள் மண்ணிற்காக 550க்கும் மேற்பட்ட போராளிகள் களமாடி வீழ்ந்த மண் ஆனந்தபுரம்.
இத் தாக்குதலில் சிறீலங்கா இராணுவம் “எதிர்பாராமல்” பெற்ற வெற்றியே அதற்கு பெரு வெற்றிகளைத் தேடிக் கொடுத்தது.
இத் தாக்குலின் போது இழக்கப்பட்ட தளபதிகளையும் போராளிகளையும் விட இவ்வளவு நாளும் தமிழர்களிற்கு தற்காப்பு வழங்கிய ஆயுதங்கள் பலவும் இழக்கப்பட்டன.
40 கிலோ மீற்றர் வரையும் சென்று தாக்கும் 130 மில்லி மீற்றர் ஆட்டிலறிகள் மூன்றை சிறீலங்கா கைப்பற்றியது. இது விடுதலைப் போராட்ட ஆயுத சமநிலையில் விழுந்த பேரிடி. அத்தோடு 81 மில்லி மீற்றர் ஆட்டிலறிகள், விமான எதிர்ப்புப் பீரங்கிகள், களப் பீரங்கள், நவீன சுடுகலன்கள் என இத்தியாதிகள்.
தாங்கள் தயாராகிக் கொண்டிருந்த சண்டைக்கு என விடுதலைப்புலிகள் வைத்திருந்த பாரிய எறிகணை, ரவைகள், வெடிபொருட்கள் என்பனவும் இதனுள் அடக்கம்.
அதைவிட கரும்புலிப்படகுகள், பாரிய படகுகள், சிறிய ரக நீர்மூழ்கிகள் என பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் பாரிய ஆயுதத் தொகுதியும் இச் சண்டை இடம்பெற்ற இடமருகே கைப்பற்றுமளவிற்கு இச் சண்டை சென்றிருந்தது.
போராட்ட வரலாற்றைத் திருப்பிப் போட்டு எம்மை முள்ளிவாய்க்கால் வரை இழுத்துச் சென்று பேரவலம் ஒன்றிற்குள் தள்ளிச் சென்றதற்கான ஆரம்ப முடிவுரைப் புள்ளியாக ஆனந்தபுரம் அமைந்துவிட்டது.

zaterdag 2 april 2011

பின்நோக்கி நகர்ந்திருக்கும் வரலாறு – முன்னாள் பெண் போராளிகளை முன்னிறுத்தி

கருத்துகள்: 002-04-2011
மிகுதி நேரில் 5
வரலாறு பின் நோக்கி நகர முடியுமா? முன்னர் என்றால் இப்படியொரு கேள்விக்கு எனது பதில் இல்லை என்பதாக இருந்திருக்கும். ஆனால் இப்போது என்னால் அப்படிச் சொல்ல முடியாது. நாம் வரலாற்றின் சாட்சியாக இருப்பின் வரலாறு, நமது நிலையில் எவ்வாறு பினநோக்கி நகர்ந்திருக்கிறது என்பதை பேசியாக வேண்டும். இந்தப் பத்தி சமகால நிலைமைகளை முன்னிறுத்தி பெண் போராளிகள் குறித்து சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விழைகிறது.
நான் இதனை வரலாற்றோடு தொடர்புபடுத்துவதற்கு என்னளவில் ஒரு காரணமுண்டு. விடுதலைப்புலிகள் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த காலத்தில் பெண் போராளிகள் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டனர். அடிப்படையிலேயே கட்டுப்பெட்டித்தனமான தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தி நிலையில் இது பெரியளவில் அதிர்வை ஏற்படுத்தியது. இது ஒரு நிரந்தரமான உடைவைக் கொண்டு வருமென்றே நாங்கள் நம்பினோம்.

இது குறித்து அப்போது நான் எழுதிய கட்டுரையொன்றில் (தமிழ்த் தேசியமும் பெண் விடுதலையும் – (கீற்று.கொம்) – வரலாற்றில் உடைவுண்ட பகுதிகள் எப்போதுமே உடைவுண்ட பகுதிகள்தான் என்று குறிப்பிட்டிருந்தேன்.

தமிழ்த் தேசியம் பெண்விடுதலை நோக்கில் ஒரு பெரும் பாய்ச்சல் என்ற புரிதலே எனக்கிருந்தது. அன்றைய சூழல் அப்படியொரு நம்பிக்கையை தந்தது. ஆனால் இன்றைய சூழல் அத்தகையதொரு நம்பிக்கையை தரவில்லை. இன்று முன்னாள் பெண் போராளிகளின் நிலைமை தலைகீழாக இருக்கிறது. முன்னைய நிலைமைகளுக்கு நாம் சாட்சியாக இருந்தது உண்மையெனின் இன்றைய சூழலுக்கும் சாட்சியாக இருப்பதே சரியானது. அதுவே எழுத்தறமும் ஆகும்.

பெண் போராளிகள் என்றதும், கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய கவிதை வரியொன்றே நினைவுக்கு வருவதுண்டு. ‘சுவரில் ஏறிய அட்டையைக் கூட தட்டிவிடுவதற்கு அண்ணன்களைக் கூப்பிட்ட தங்கைகளிலிருந்து அங்கையற்கண்ணிகள் உருவாவது எப்படி’ – ஆனால் இன்று தோல்வியடைந்திருக்கும் அந்த அங்கையற்கண்ணிகளின் வாழ்வே ஒட்டிக் கொள்வதற்கு சுவர் தேடியலையும் அட்டை நிலைக்கு தாழ்ந்து விட்டது என்பதுதான் உண்மை. ஒரு காலத்தில் அவர்களை நேர்காண்பதற்கும், அவர்களின் படங்களைப் பிரசுரிப்பதற்கும் முண்டியடித்துக் கொண்டு நின்ற ஊடகங்கள் எவையும், இன்று அவர்கள் குறித்து வாய்திறப்பதில்லை ஏனெனில் இப்போது அவர்கள் நமது அரசியல் சந்தையில் (Political Market) வெறும் குப்பைகள்.

ஈழத் தமிழரின் அரசியலானது, மிதவாதத் தலைமைகளின் செல்வாக்கிலிருந்து இயங்கங்களின் செல்வாக்கிற்கு இடம்பெயர்ந்த பின்னரே அதுவரை சாதிய ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களும் இரண்டாம் தரமாக கருதப்பட்ட பெண்களும் நமது அரசியல் அரங்கில் செல்வாக்கு மிக்கவர்களாக வெளித்தெரியத் தொடங்கினர். ஆரம்பத்தில் EPRLF, PLOTE போன்ற ஆயுத அமைப்புக்களே பெண்களை போராட்டத்தில் உள்வாங்கிய இயக்கங்களாக இருந்தன. இந்த இயக்கங்கள் பெண்களை உள்வாங்கும் போது புலிகள் அதில் பெரியளவில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. புலிகள் அவ்வாறு ஆர்வம் காட்டாமைக்கு தமிழ்ச் சமூகத்தின் மரபார்ந்த புரிதல்களுடன் தாம் மோதவிழைவது தமது இயக்கத்தின் வளர்ச்சிக்கு தடையாக அமையலாம் என்று அவர்கள் கருதியிருக்கலாம்.

புலிகள் சுதந்திரப் பறவைகள் அமைப்பை உருவாக்கிய போதும் ஆரம்பத்தில் அது பெரியளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட இயக்க மோதல்கள், அதில் பெருந்தொகையானோர் அழிக்கப்பட்ட சூழல், இதனால் இளைஞர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் குறித்து ஏற்பட்ட அச்சங்கள் என்பவற்றின் திரட்சியாக பெண்களை அதிகளவில் இணைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இந்தச் சூழலில்தான் புலிகள் அதிகளவில் பெண்களை இயக்கத்தில் உள்வாங்கிக் கொள்கின்றனர்.

ஏனைய இயக்கங்கள் போலல்லாது புலிகள் பெண்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து அவர்களை முறையானதொரு அமைப்பாக்கினர். ஆரம்பத்தில் புலிகளின் சுதத்திரப்பறவைகள் அமைப்பில் மத்தியதரவர்க்க மேட்டுக்குடிப் பெண்களே அதிகம் இணைந்து கொண்டிருந்தனர். ஆரம்ப காலங்களில் நிர்மலா நித்தியானந்தன் போன்றவர்கள் புலிகளின் மகளிர் அணியில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு மேட்டுக்குடிப் பெண்களே அதிகம் புலிகளால் ஈர்க்கப்பட்டிருந்தனர். நிர்மலா போன்றவர்கள் இயக்கத்தில் இருப்பதை புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை என்று அடேல் பாலசிங்கம் தனது ‘சுதந்திர வேட்கை’ நூலில் குறிப்பிடுகின்றார். நிர்மலா போன்றவர்களின் செல்வாக்கு சாதாரண பெண்கள் இயக்கத்தில் சேர்வதை தடுக்கலாம் என்பதாலேயே பிரபாகரன் அதனை விரும்பவில்லை என்றும் அடேல் குறிப்பிடுகின்றார்.

ஆனால் காலப்போக்கில் பல்வேறு அக முரண்பாடுகளால் அவர்கள் வெளியேற அந்த இடத்தை அங்கையற்கண்ணி போன்ற சாதாரண ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிரப்புகின்றனர். புலிகளின் முடிவு வரை அதில் தங்களை அர்ப்பணித்த பெண்கள் எவ்வகையான குடும்பப் பின்னணிகளைக் கொண்டிருந்தனர் என்பதற்கு அங்கையற்கண்ணி தாக்குதலுக்கு செல்லும் முன்னர் தனது நண்பர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றே சான்றாகும் – ‘நான் மரணிக்கும் காலம் நல்லூர் கோவில் திருவிழாவாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது தான் எனது தாயிடம் கோவில் திருவிழாவில் கடலை விற்ற பணம் இருக்கும். அப்போதுதான் எனது தயாரால் எனது தோழிகளுக்கு, எனது இறப்பை நினைவு கூர்ந்து உணவு பரிமாற முடியும்’ (சரிநிகர் – பெ 10, 2000)

தமிழ் சமூகத்தின் மரபார்ந்த சிந்தனையினை உடைத்து நொறுக்கும் நம்பிக்கையாக இருந்த அங்கையற்கண்ணிகள் இன்று எவ்வாறு நோக்கப்படுகின்றனர்? அவர்களை முன்னர் போற்றிப் புகழ்ந்தவர்கள் எல்லாம் இன்று எங்கு ஓடி ஒழிந்து கொண்டனர்?

இன்று விடுவிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஒரு வரியில் சொல்வதாயின் சூனியமாய் கழிகிறது அவர்கள் எதிர்காலம். முன்னாள் போராளிகளை சமூகம் தங்களின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஏன் பெற்றோர்களே பலரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. சமீபத்தில் விடுவிக்கப்பட்ட இரு பெண் போராளிகள் பெற்றோர்கள், உறவினர்கள் எவருமே ஏற்றுக் கொள்ளாமையால் மீண்டும் முகாமிற்கே சென்றிருக்கின்றனர்.

புலிகள் இயக்க ஒழுங்கில் சாதி, பிரதேச ரீதியான பாகுபாட்டின் அடிப்படையில் உறவுகள் அமைந்திருக்கவில்லை. புலிகளுக்குள் நடக்கும் திருமணங்களும் அவ்வாறானதொரு ஒழுங்கில்தான் அமைந்திருந்தன. அவ்வாறு சாதி, பிரதேசம் கடந்து திருமணம் செய்த பெண்களின் கணவன்மார் யுத்தத்தில் இறந்துவிட தற்போது இருபகுதி உறவுகளாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை. தனித்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் அவர்கள் குறித்து பல்வேறு தவறான கண்ணோட்டங்களும் சமூகத்தின் மத்தியில் நிலவுகிறது. சாதாரணமாகப் படித்து நல்ல தொழிலில் உள்ள பெண்களே திருமணம் செய்வதில் பல்வேறு குறைகள் காணும் நமது பெருமைமிக்க தமிழ்ச் சமூகத்தில் முன்னாள் பெண் போராளிகள் மீண்டும் குடும்ப வாழ்வில் ஈடுபடுவது, அவர்களை சமூகத்தின் ஆண்கள் ஏற்றுக் கொள்வது என்பதெல்லாம் நடந்துவிடும் விடயங்களல்ல. இவ்வாறான நிலைமைகளால் தத்தளிக்கும் முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வை எவ்வாறு சீர்செய்வது?

இவர்கள் குறித்து நமது அரசியல்வாதிகள் கரிசனை கொள்வார்களா? நிட்சயமாக இல்லை. அரசு கரிசனை கொள்ளுமா அது ஒருபோதுமே நடைபெறப் போவதில்லை. அப்படியானால் இவர்கள் குறித்து கடமையுணர்வுடன் யார் தலையிட முடியும். இன்றைய சூழலில் இவர்களைக் கரைசேர்க்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பும் அதனைச் செய்யக் கூடிய ஆற்றலும் நமது புலம்பெயர் அமைப்புக்களுக்கு மட்டுமே உண்டு. புலம்பெயர் சமூகம் என்பதற்கும் புலம்பெயர் அமைப்புக்கள் என்பதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடுண்டு.

எனது முன்னைய ‘முன்னாள் போராளிகளும் புலம்பெயர் சமூகத்தின் பாராமுகமும்;’ என்னும் பத்தி குறித்து பேசிய நண்பரொருவர் அதில் ஒட்டுமொத்த புலம்பெயர் சமூகத்தையும் குற்றம் சாட்டுவதுபோன்ற சாயல் தெரிகிறது. அது பொருத்தமானதல்ல என்று குறிப்பிட்டிருந்தார். அது உண்மைதான். அதனை இந்தப் பத்தி திருத்திக் கொள்கிறது. இங்கு பிரச்சனை புலம்பெயர் சமூகமல்ல. புலம்பெயர் மக்களின் நிதி ஆதரவுகளைப் பெற்ற, இன்றும் பெற்றுக் கொண்டிருக்கிற அமைப்புக்களின் செயற்பாடுகளே இங்கு பிரச்சனையாக இருக்கிறது. இவ்வாறான அமைப்புக்கள், களத்தில் போராடியவர்களின் தியாகத்தால்தான் நாங்கள் இப்படியெல்லாம் இருக்க முடிகிறது, பேச முடிகிறது என்பதை ஒரு கணமாவது எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதில் பிறிதொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விழைகிறேன். புலிகள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் – புலிகளின் பெண்கள் அமைப்பை கடுமையாக விமர்சிப்பதிலேயே தங்கள் காலத்தைச் செலவழித்துக் கொண்டிருந்த பெண்ணியவாதிகள் என்போர் சகலரும் இப்போது நடுவீதியில் கிடக்கும் அந்த முன்னாள் (புலிகளின்) பெண் போராளிகளுக்கு உதவ முன்வரலாம். புலிகள் – பெண் விடுதலை கருதி பெண்களை அழைக்கவில்லை என்று அறிக்கை விட்டவர்கள் – இது குறித்து புலிகளுக்கு அறிவுரைகள் வழங்கியவர்கள் என்று, நீங்கள் அனைவரும் வென்று விட்டீர்கள். அப்போது அதனை விமர்சித்த நாங்கள் அனைவரும் தோற்று விட்டோம். இப்போது உங்களின் காலம். இது பற்றி ஆய்வாளர் தி.வழுதி குறிப்பிட்டிருப்பது மிகவும் சரியானது- ‘புலிகள் இயக்கம் இப்போது இல்லை நீங்கள் ‘சந்தர்ப்பவாதிகள்’ அல்ல என்பதையும் நீங்கள் மக்கள் நேயம் மிக்கவர்களே தான் என்பதையும் நிரூபிக்க இதுவே சந்தர்ப்பம். இது உங்களுக்கான நேரம் தயவு செய்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’

(ஆதாரம் – http://www.puthinappalakai.com/view.php?20110310103361