தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 april 2011

விடுதலைப்புலிகளின் தலைவர் மேற்கத்தேய நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே செயற்பட்டார்: சதாசிவம் கனகரத்தினம்

 
[ வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011, 05:33.06 AM GMT ]
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்கத்தேய நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே செயற்பட்டார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கனகரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமன்றி அவரது முக்கிய தளபதிகள் அனைவரும் மேற்கத்தேய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே செயற்பட்டனர் என்றும்  அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
இன்றைய லக்பிம சிங்கள நாளேட்டிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே முன்னாள் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இராணுவத்துடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் பொதுமக்களை துப்பாக்கி முனையில் அடக்கியாண்டனர். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குத் தப்பியோட முனைந்த பொதுமக்களை ஒன்றில் சுட்டுக் கொன்றனர். அல்லது துப்பாக்கி முனையில் பங்கர்களுக்குள் சிறைப்படுத்தினர்.
ஆனால் அரசாங்கம் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் யுத்த சூனிய வலயங்களைப் பிரகடனப்படுத்தியிருந்தது. இராணுவத்தினர் பொதுமக்களைப் பாதுகாப்பதில் முன்னின்று செயற்பட்டதன் காரணமாகவே பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குத் தப்பி வரத் தலைப்பட்டனர்.
பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பிரதேசத்தில் நானும் அன்று சிறைப்பட்டிருந்தேன். அதன் காரணமாக பொதுமக்கள் பட்ட துன்பங்கள் மற்றும் யுத்தத்தின் பயங்கர அனுபவங்கள் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும்.
விடுதலைப்புலிகளின் ஆயுததாரிகள் கடைசிக்கட்ட யுத்தத்தின் போது ஈவிரக்கமின்றி பொதுமக்களைப் பெருந்தொகையில் படுகொலை செய்திருந்தனர். ஆனால் அவை பற்றியெல்லாம் தாருஸ்மன் குழுவினர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டவில்லை.
அந்த வகையில் தாருஸ்மன் குழுவினரின் அறிக்கையானது மூன்றாம், நான்காம் தரப்பினரின் கருத்துக்களை மட்டுமே உள்ளடக்கியிருக்கும் அறிக்கையே தவிர, சம்பவத்துடன் நேரடித்  தொடர்புடைய எவருடைய சாட்சியமும் அதில் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten