தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 april 2011

இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி நாட்களில் விடுதலைப் புலிகள் 600 சிவிலியன்களை கொன்றொழித்தனர்: முன்னாள் எம்.பி. கனகரத்தினம்

[ புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011, 01:45.35 AM GMT ]
இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி நாட்களில் சுமார் 600 சிவிலியன்களை விடுதலைப் புலிகள் கொன்றொழித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் குற்றம் சாட்டுகின்றார்.
ஆசியன் ட்ரிபியூன் ஆங்கில இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோரையும் படுகொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
அவர்கள் இருவரும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட சிவிலியன்களின் சடலங்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்ட போதே தான் அதனைக்கண்டதாகவும், விசாரித்துப் பார்த்தபோது அவர்கள் விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட விடயம் தெரிய வந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இரகசியப் பொலிசார் நான்காம் மாடியில் தன்னைத் தடுத்து வைத்து விசாரித்த போது தான் இந்த விபரங்களை குறிப்பிட்டிருந்த  போதிலும் அவர்கள் அது தொடர்பில்  போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

1 opmerking:

  1. அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு ஆதரவு
    [ செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011, 12:01.42 PM GMT ]
    அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கையுடனான உறவு வலுப்படும் வகையிலான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை கவனத்திற் கொள்ளுமாறு கிறிஸ் ஹொலன் மற்றும் ரொபர்ட் எடர்ஹோல்ட் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கப் பாராளுமன்றத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பிரஸ்தாப கடிதம் அமெரிக்கப் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டிருந்தது.

    இலங்கை பல்லின சமூக மக்கள் வாழும், ஜனநாயக நாடாகும்.விடுதலைப் புலிகளுடான யுத்தத்திலிருந்து அண்மையில் தான் மீண்டு வந்துள்ளது.அத்துடன் முப்பதுவருட கால உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதில் முனைப்புடன் செயற்படுகின்றது என்றும் அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

    எனவே அமெரிக்காவுடனான இலங்கையின் உறவு வலுப்பெற உழைப்பதற்கு முன்வரவேண்டுமென்று அவர்கள் ஏனைய உறுப்பினர்களிடம் அக்கடிதம் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    BeantwoordenVerwijderen