தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 april 2011

உண்மை பேசினால் அவர் தமிழருக்கு எதிரானவர்!!

போராட்ட வரலாறின் போது தமிழ்மக்களுக்காக ஆயுதமேந்தியதாக கூறி,தமது சுய லாபங்களுக்காக சிங்கள அரசின் காலடியில் பணிந்தவரெல்லாம் உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்து,கூட இருந்தே குழிபறித்து தியாகிகளாகையில் உண்மைகளை சொல்பவர் துரோகிகள்தான்!!வரலாற்றை மறந்த பல்கலைக்கழக புத்தகப்பூச்சிகள் புனிதமிழந்து,சார்ப்புபேசி வாழ்வது இன்றல்ல,நேற்றல்ல.நமது வரலாறே படித்த முட்டாள்களால் நாசமாக்கப்பட்டதுதான்.அனுபவ அறிஞர்கள் அன்றே சொன்னது போல ஏட்டுச்சுரக்காய் கறிக்கு....,அப்படியிருக்கையில் இப்புலம்பலும் இனிதே!!

நவரத்தினத்தின் கருத்துக்களுக்கு யாழ் பல்கலைக்கழக மட்டத்தில் கடும் அதிர்ப்தி (வீடியோ இணைப்பு)
2009மே இற்குப் பிறகு தங்களுக்கு சுகந்திரம் கிடைத்துள்ளது என்றும் ஜனாதிபதியை சந்திக்க வாய்த்த தருணம் மிகவும் இனிமையானது என்று கலாநிதி நவரத்தினம் குறிபிட்டார். பயங்கரவாதத்தைத் தோற்கடித்து தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி சுகந்திரத்தை வழங்கியவர் எனவும் பாராட்டிப் பேசினார்.


பயங்கரவாத்தை ஒழித்து சமாதானம், நல்லிணக்கம், அமைதி ஏற்பட்டு வடக்கு கிழக்கு மக்கள் அச்சங்களின்றி வாழும் சூழலை ஜனாதிபதி அவர்கள் ஏற்படுத்தியுள்ளார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் மாணவர்கள் அச்சமின்றி இடையூறின்றி கல்வியை தொடர்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதன்பொழுது வடக்கு கிழக்கு மாணவர்களின் கல்வி சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி வாக்குறுதி அளித்ததாகவும் கலாநிதி நவரத்தினம் குறிப்பிட்டுள்ளார்.

கலாநிதி நவரத்தினத்தின் கருத்துக்கள் மிகுந்த கண்டனத்திற்குரியவை என்றும் மக்களும் மாணவர்களும் சுகந்திரமில்லாத சூழலில் வாழும் பொழுது தமது சுயநலன்களுக்காக மாணவர்களை சந்திக்க வைத்து அவர்களை ஜனாதிபதியின் முன்பாக விரிவுரையாளர் நவரத்தினம் பாடியுள்ளமை தமது பதவிகளை தக்க வைக்கவும் சுகபோகங்களை பாதுகாத்துக் கொள்வதற்குமான நடவடிக்கையே என பல்கலைக்களக தரப்பினர் சிலர் தெரிவித்துள்ளனர். அத்துடன் விரிவுரையாளர் நவரத்தினத்தின் தனிப்பட்ட சந்திப்பு என்றும் பல்கலைக்கழக சந்திப்பு அல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேற்படி நிகழ்வை அமைத்த கலாநிதி நவரத்தினத்திற்கு எதிராக பல்கலைக்கழகத்தில் எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த சந்திப்பும் அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் எந்த வகையிலும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினது கருத்து அல்ல என்றும், இதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் பல்கலைக்கழக தரப்பனர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதேவேளை யாழ் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் இவரது நடத்தைகள் குறித்து ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இவரது சில்மிசங்கள் தொடர்பில் மாணவர்களது துண்டுப் பிரசுரங்களும் வெளிவந்து இருந்தது. இந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருந்த பொழுது இரகசியமாக பலாலி இராணுவத் தளத்திற்குச் சென்று ஜனாதிபதியை புகழ்ந்து பாடல் ஒன்றை பாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
13 Apr 2011

Geen opmerkingen:

Een reactie posten